- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
“தமிழகத்தில் கல்விக்கடன்களை ரத்து செய்ய வேண்டும்!” உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Author: Santhosh Raj KM
Published: March 27, 2025
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை நடந்த பல்வேறு தேர்தல்களில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டி, மணிமாறன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்விக் கடன் பெற்று உயர்கல்வி படித்து வருகின்றார்கள்.. பட்டம் பெற்று வேலைக்கு சென்ற பிறகு கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால், படித்து முடித்த பிறகு வேலை கிடைக்காமலும், குறைந்த ஊதியத்திற்கு பணிக்கு செல்லும் மாணவர்களால் கல்விக் கடனை திரும்பச் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தி.மு.க-வும் இதே வாக்குறுதியை அளித்து தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது
இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த மனிமாரன் என்பவர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை போல கல்வி கடனை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில்
எனது மகளின் பட்டபடிப்பிற்காக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கல்விக்கடன் பெற்று, அவர் பொறியியல் படிப்பை முடித்த போதும் இதுவரை வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், கல்விக்கடனை திரும்ப செலுத்த முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் என்று மணிமாறன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி கல்விக் கடன் பெற்று பயின்ற மாணவர்களின் நலனை காக்க, இந்தக் கடன் திட்டத்தை ரிசர்வ் வங்கி ( Reserver bank ) மறுசீரமைப்பு செய்ய வேண்டும் அல்லது கல்விக்கடனை திரும்ப வசூலிக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தமது மனுவில் தெரிவிக்கபட்டு இருந்தது.
திருப்பூரை சேர்ந்த மனிமாறனின் பொதுநல வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2006 -2011 திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக கடன் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.