- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கேப்டன் கூட இல்லை ஒழுங்கா விளையாடலனா இடம் போய்டும்! ரோஹித்தை எச்சரித்த வாகன்!
ரோஹித் சர்மா ஒழுங்காக விளையாடவில்லை என்றால் அவருடைய இடம் போய்விடும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான வாகன் எச்சரித்து பேசியுள்ளார்.

Author: Bala Murugan K
Published: April 1, 2025
ஐபிஎல் 2025 சீசனின் தொடக்கத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ரோஹித் சர்மா முறையே 0, 8 மற்றும் 13 ரன்கள் எடுத்து, மொத்தம் 21 ரன்களை மட்டுமே பதிவு செய்துள்ளார். அவருடைய வழக்கமான அதிரடி ஆட்டத்திற்கு அப்படியே எதிர்முனையாக இந்த சீசன் அமைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரிய சோகமான விஷயமாக அமைந்துள்ளது.
மார்ச் 31, 2025 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான போட்டியில், வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், ரோஹித் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அஸ்வனி குமாரின் 4 விக்கெட்டுகள் மற்றும் ரியான் ரிக்கெல்டனின் அரைசதம் மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தாலும், ரோஹித்தின் தொடர்ச்சியான சரிவு ரசிகர்களையும் விமர்சகர்களையும் அவரை பற்றி பேச வைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
அந்த வகையில், முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன், சிபிஎஸ்ஸில் (Cricbuzz) பேசுகையில், ரோஹித் சர்மாவின் பெயர் மற்றும் ஐபிஎல் வரலாற்றில் அவரது சாதனைகள் இல்லையென்றால், இந்த மாதிரியான சராசரி எண்ணிக்கைகளுடன் (average numbers) அவர் அணியில் தன் இடத்தை தக்க வைத்திருக்க முடியாது என்று கூறினார்.
இது தொடர்பாக பேசிய அவர் "ரோஹித் இப்போது கேப்டனாக இல்லை. எனவே, அவரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே மதிப்பிட வேண்டும். அவரது எண்ணிக்கைகள் சராசரியாக உள்ளன. இது ரோஹித் சர்மா போன்ற ஒரு வீரருக்கு போதுமானதல்ல. ஆனால், அவரது பெயர் ரோஹித் சர்மா இல்லையென்றால், இந்த எண்ணிக்கைகளுடன் அவர் அணியில் இடத்தை இழந்திருப்பார்.
"மும்பை இந்த சீசனில் வெற்றி பெற வேண்டுமென்றால், ரோஹித்தின் ரன்கள் தேவை. அவரது திறமை, அணியை தனியாக வெற்றி பெற வைக்கும் அளவுக்கு உள்ளது. ஆனால், அவர் அதிரடியான பார்முக்கு திரும்பவேண்டும். ரோஹித்தின் கடந்த கால சாதனைகளைப் பார்க்கும்போது, அவர் ஐபிஎல்லில் 6,628 ரன்கள் எடுத்து, மூன்றாவது அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் உள்ளார். ஆனால், சமீப காலமாக அவரது ஃபார்ம் சரியில்லாதது அணிக்கும் பின்னடைவு என்று நான் சொல்வேன்.
"ரோஹித் தனது பழைய ஃபார்மை மீட்டெடுத்து, அணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால், அவரது இடம் கேள்விக்குறியாகலாம்," என்று வாகன் எச்சரித்தார். இருப்பினும் ரோஹித்தின் ரசிகர்கள் இது அவருக்கு ஒரு தற்காலிக சரிவு மட்டுமே என்று நம்புகின்றனர். அவரது திறமை மற்றும் அனுபவம், அவரை மீண்டும் அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வரும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.