- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
குரூப் 4 விடைத்தாள் விவகாரம் : ஒரு நபருக்காக விதிகளை மற்ற முடியாது! - நீதிமன்றம் உத்தரவு!
கையொப்பம் இல்லாமல் கொடுத்த குரூப்4 தேர்வு OMR தாளை மதிப்பீடு செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

Author: Santhosh Raj KM
Published: March 19, 2025
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி முஹம்மத் இப்ராஹிம் என்பவர் குருப் 4 தேர்வு எழுதிய பொழுது அந்த விடைத்தாளில் அவருடைய கையொப்பம் போட தவறியதால் அவரது விடைத்தாள் திருத்தம் செய்யப்படவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு 2024 ஜனவரி 30-ம் தேதி ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்வு (குரூப் IV) அறிவிப்பு வெளியானது. முஹம்மத் இப்ராஹிம் என்பவர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து 2024 ஜுன் 9-ம் தேதி நடந்த தேர்வில் தேர்வு எழுதினார்.
இவர் மூன்று ஆண்டு கல்லூரி படிக்கும் பொழுதே இவருக்கு பெரிய விபத்து எற்ப்பட்டு அதனால் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிப்புத் துறை
(Department of Empowerment of Persons with Disability ) அவரது இயலாமையை 62%. என்று உறுதி செய்து இருந்தது .இவர் மாற்றுத்திறனாளி என்ற பிரிவின் கீழ் தேர்வு எழுதினார்.
ஜூன் 09 2025 அன்று நடந்த தேர்வில் இவருக்கு உதவ தனி எழுத்தாளர் மற்றும் தனி அறை வழங்கப்பட்டது. மனுதாரர் தேர்வு நேரத்துக்கு முன்பே தேர்வை முடித்துவிட்டார். உதவி எழுத்தாளரும் விடைத்தாளை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டார். ஆனால், மனுதாரர் அந்த விடைத்தாளில் கையொப்பம் போடவில்லை என்று மனுதாரரின் விடைத்தாள் திருத்த ஆணையம் நிராகரிக்கப்பட்டது. தனது OMR தாளை மதிப்பீடு செய்து, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவும், பொருத்தமான பதவிகளுக்கு தன்னை நியமிக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,
நீதிமன்றத்தின் அணுகுமுறையின் மூலம் அவரது வினாத்தாளைத் தேர்வு செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்தினார். கையொப்பம் இல்லாவிட்டாலும், விடைத்தாளைப் பெற்று, அதன் நம்பகத்தன்மையைக் கண்டறிய பதிவு எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று வாதிடப்பட்டது.
தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தரப்பில்
விடைத்தாள்களில் தேர்வர்கள் கையொப்பமிட வேண்டும் என்று அறிவுறுத்தல்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார். ஒரு தேர்வர் கையொப்பமிட முடியாவிட்டால், இடது கட்டைவிரல் ரேகை அல்லது வலது கட்டைவிரல் ரேகையை ஒட்டலாம் என்று அறிவுறுத்தல்களில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு தேர்வர் இரண்டு கைகளையும் பயன்படுத்த முடியாவிட்டால், கட்டைவிரல் ரேகை நெடுவரிசையை காலியாக விடலாம் என்றும் இதன் அறிவுறுத்தலின் பிரிவு 4.10 கூறுகிறது என்றார் இருப்பினும், தற்போதைய வழக்கில், வேட்பாளர் தனது வலது கையில் பக்கவாதம் ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். மேலும் அவரது இரண்டு கைகளும் செயலிழந்ததாக கூறவில்லை என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,
ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் கட்டாயமானவை என்பதைக் குறிப்பிட்ட நீதிமன்றம், கையொப்பமிடத் தவறிய ஒரு குறிப்பிட்ட ஒருவருக்காக விதிகளை மாற்ற முடியாது என்பதைக் குறிப்பிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்தார்.