- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வரி பிரச்சனைக்கு அவர் தான் காரணம்! பதவிக்காக இப்படி செய்கிறார்! கனடா பிரதமரை விளாசிய டிரம்ப்!
வரி பிரச்சினைக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய காரணமென கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

Author: Bala Murugan K
Published: March 7, 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, கனடா-அமெரிக்காவுக்கிடையே ஏற்பட்ட வரி பிரச்சினைக்கு ட்ரூடோ முக்கிய காரணமென அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி, மீண்டும் கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட முயற்சி செய்கிறார் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
ட்ரூடோவின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக கொள்கைகள் காரணமாக அமெரிக்கா-கனடா உறவுகள் சில சமயங்களில் பதற்றமான நிலைக்கு சென்றுள்ளன. ஏனென்றால், டிரம்ப் அதிபராக இருக்கும் போது, கனடாவின் சில வர்த்தக நடவடிக்கைகள் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அதன்பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ரீதியான பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. குறிப்பாக, இரும்பு (steel) மற்றும் அலுமினியம் (aluminum) இறக்குமதிக்கு அமெரிக்கா வரிகள் விதித்த போது, கனடா அதற்கு பதிலடி கொடுத்தது.
வரிவிவகாரம்
2025ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்க உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை குறைத்து, உள்நாட்டு தொழில்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு, கனடா மற்றும் மெக்சிகோ அரசுகளின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% பதிலடி வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அங்கிருந்து இருவருக்கும் மோதல் வெடித்த நிலையில், இன்னும் முடியாமல் தொடர் கதையாக இருந்து வருகிறது.
ட்ரம்ப் - ட்ரூடோ மோதல்
இந்த சூழலில் ஜஸ்டின் ட்ரூடோ தனது அரசியல் எதிரணிகளுக்கு எதிராக, அமெரிக்காவுடன் வந்திருக்கும் வர்த்தக பிரச்சனைகளை பயன்படுத்தி, தன் மீண்டும் தேர்ந்தெடுப்பு பிரசாரத்தை வலுப்படுத்த முயற்சி செய்கிறார் என்று டிரம்ப் குற்றம் சாட்டி பேசியிருப்பது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது போல பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலைமை
கனடாவில் அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ட்ரூடோ மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட பல முயற்சிகள் செய்து வருகிறார். இந்த சூழலில், அமெரிக்கா-கனடா வர்த்தக உறவுகள், அதிலிருந்து ஏற்படும் பிரச்சனைகள், அரசியல்வாதிகள் எப்படி அதை பயன்படுத்துகிறார்கள் என்பதை சுற்றியே விவாதம் நடக்கிறது.
டிரம்ப் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்ரூத் சொஷியல் (Truth Social) கணக்குகளில் தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அப்படி ஒரு பதிவில் ட்ரூடோவை அவர் "மிகவும் பலவீனமான தலைவர்" என்று குறிப்பிடுவதோடு, "அவர் தான் இந்த வரி பிரச்சனையை உருவாக்கியவர், ஆனால் அதை வைத்து மீண்டும் அதிகாரத்தை பிடிக்க முயல்கிறார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மற்றொரு பதிவில் “ நம்பினாலும் நம்பாவிட்டாலும், கனடாவுக்காக அவர் செய்த மோசமான வேலை இருந்தபோதிலும், ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, அவர் பெரும்பாலும் ஏற்படுத்திய கட்டணப் பிரச்சினையைப் பயன்படுத்துகிறார் என்று நான் நினைக்கிறேன். இவை பார்க்க மிகவும் வேடிக்கையாக உள்ளது"எனவும் டிரம்ப் பேசியுள்ளார்.
டிரம்ப் இப்படி பேசியுள்ளது கனடா மற்றும் அமெரிக்காவில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரூடோவின் ஆதரவாளர்கள் இதை நிராகரிக்க, டிரம்பின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவளிக்க, சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் நடந்து வருகிறது.