ஏற்றத்துடன் நிறைவடைந்த இன்றைய பங்குச்சந்தை! முக்கிய விவரங்கள் இதோ…
ஜனவரி 28-ல் தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 141.70 புள்ளிகள் உயர்ந்து 22,970.85 எனவும், மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 613.60 புள்ளிகள் சரிந்து 75,979.77 எனவும் நிறைவு பெற்றுள்ளன.

Author: Kanal Tamil Desk
Published: January 28, 2025
ஜனவரி 28 நிலவரப்படி தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி குறியீடு எண் 141.70 (+0.62%) புள்ளிகள் அளவுக்கு ஏற்றம் கண்டு 22,970.85 என்கிற அளவில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இன்று முழுவதும் ஏற்ற இறக்கத்தை கண்ட நிஃப்டி குறைந்தபட்சம் 22,857.65 என்ற அளவிலும் அதிகபட்சமாக 23,137.95 என்ற அளவு வரையிலும் சென்றது.
Advertisement
அதேபோல, மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் நிலவரத்தை பொறுத்தவரையில், இன்று 75622.88 புள்ளிகள் முதல் 76,512.96 புள்ளிகள் வரை வர்த்தகமானது. இறுதியில், 613.60 புள்ளிகள் உயர்ந்து (+0.60%) 75,979.77 என்ற அளவில் இன்றைய மும்பை பங்குச்சந்தை முடிவடைந்தது.
மிட்கேப் குறியீடு நிஃப்டி 50 உடன் ஒப்பிடும்போது குறைவான செயல்திறனை வெளிப்படுத்தியது, நிஃப்டி மிட்கேப் 50யானது, 0.52% குறைந்துள்ளது. நிஃப்டி ஸ்மால் கேப் 100ஆனது 288.25 புள்ளிகள் அல்லது 1.77% குறைந்து 16,304.25-ல் முடிவடைந்ததால், ஸ்மால் கேப் பங்குகளும் நிஃப்டி 50க்கு பின்தங்கின.
Advertisement
எந்தெந்த நிறுவனங்கள் இன்று உயர்வை கண்டது, எந்தெந்த நிறுவனங்கள் சரிவை கண்டது என்பது பற்றியும் கீழே காணலாம்…
சென்செக்ஸ் :
Advertisement
இன்று மும்பை பங்குசந்தை சென்செக்ஸில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களின் பட்டியலில், பஜாஜ் ஃபைனான்ஸ் (+4.33%), ஆக்சிஸ் வங்கி (+3.81%), பஜாஜ் ஃபின்சர்வ் (+3.41%), ஹெச்டிஎஃப்சி வங்கி (+2.54%), டாடா மோட்டார்ஸ் (+2.29%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
அதிக நஷ்டம் அடைந்த நிறுவனங்களின் லிஸ்டில் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் (-4.35%), விப்ரோ (-1.35%), லார்சன் & டூப்ரோ (-1.16%), ஐடிசி (-1.13%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (-0.96%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
நிஃப்டி :
தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் ஃபைனான்ஸ் (+4.38%), ஆக்சிஸ் வங்கி (+3.84%), ஸ்ரீராம் ஃபைனான்ஸ் (+3.64%), பஜாஜ் ஃபின்சர்வ் (+3.34%), சிப்லா (+2.43%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
அதிக நஷ்டம் அடைந்த நிறுவனங்கள் லிஸ்டில் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் (-4.57%), பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (-2.31%), கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் (-2.16%), ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் (-2.04%), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (-1.88%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
No comments yet.
