தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Thursday, May 15, 2025 | India
Home / தமிழ்நாடு

மத்திய சென்னையில் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும்! உயர்நீதிமன்றம் உத்தரவு!

மத்திய சென்னை தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை செல்லாது என அறிவிக்ககோரி அதே தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

News Image

Author: Santhosh Raj KM

Published: March 7, 2025

கடந்த 2024-ல் நடந்த மக்களவைத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி தேர்தலில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 2 லட்சத்து 44 ஆயிரத்து 689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொகுதியின் தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரி, போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்தார்.

மனுதாரர் தாக்கல் செய்த மனுவில்..,

தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நாளான்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும், பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்ட்களுக்கு செலவிட்ட தொகையை முறையாக தெரிவிக்கவில்லை எனவும், 

தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 95 லட்சம் ரூபாயை விட அதிக தொகையை தயாநிதி மாறன் செலவிட்டதாகவும் அதுமட்டுமின்றி மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை என்பதால் தேர்தலை செல்லாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்து இருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நிதிபதி மனு தொடர்பாக தயாநிதி மாறன் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுருந்தது.

தயாநிதி மாறன் தரப்பில்..,

இந்த வழக்கு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை நீக்க கோரி தயாநிதி மாறன் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 வழக்கு  இன்று ( மார்ச் 7) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் எம்.எல்.ரவி, மனுவில் கூறியிருந்த குற்றச்சாட்டுக்களை நீக்கி, தேர்தல் தொடர்பான இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, தயாநிதி மாறனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Tags:Madras High courtDayanidhi maranDMK MP

No comments yet.

Leave a Comment