தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

தெலுங்கானாவை உலுக்கிய ஆணவக் கொலை: ஒருக்கு மரண தண்டனை, 6 பேருக்கு ஆயுள் தண்டனை.!

தெலுங்கானாவில் 2018 ஆண்டு நடைபெற்ற ஆணவக் கொலை வழக்கில் தெலுங்கானா நீதிமன்றம் கொலையாளி சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது.

News Image

Author: Gowtham

Published: March 10, 2025

தெலுங்கானா மாநிலத்தையே உலுக்கிய ஆணவக் கொலை வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீண்ட கால விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் A2 ஆக இருக்கும் சுபாஷ் சர்மாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நல்கொண்டா மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தின் மிரியாலகுடா பகுதியில் அம்ருதாவும் பிரனயும் காதலித்து 2018 இல் திருமணம் செய்து கொண்டனர். உயர் சாதி இந்துப் பெண்ணான அம்ருதா, சாதி மற்றும் மதம் பார்க்கமால் அவரது குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பை மீறி, பிரணய் உடன் திருமணம் செய்து கொண்டார்.

அமிர்தாவின் தந்தைக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை. இந்நிலையில், கலப்புத் திருமணத்தால் கோபமடைந்த அம்ருதாவின் தந்தையும் தொழிலதிபருமான மாருதி ராவ், கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, செப்டம்பர் 14, 2018 அன்று, அம்ருதா கர்ப்பமாக இருந்ததால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகச் சென்று கொண்டிருந்தபோது, ​​சுபாரி கும்பல் அவரை வழிமறித்து பிரனாயை கொடூரமாக ஆணவக் கொலை செய்தது. இது, மருத்துவமனையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாருதி ராவ் மற்றும் கொலையாளிகள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த ஆணவக் கொலை அப்போது தெலுங்கானாவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த கொலை வழக்கின் விசாரணையில், பிரணய்யைக் கொலை செய்தால் தனது குடும்பத்தின் மரியாதையை மீட்டெடுக்கலாம் என்று நினைத்து அமிர்தாவின் தந்தை, கொலை செய்வதற்கு சுபாஷ் சர்மா உள்ளிட்ட ஒப்பந்தக் கொலையாளிகளுக்கு அவர் ரூ.1 கோடி கொடுத்தார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இருப்பினும், மார்ச் 2020 இல், சிறையில் இருந்தபோது ​​மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் விசாரணை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆணவக் கொலை வழக்கை நல்கொண்டா காவல்துறை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டது. மேலும், ஒவ்வொரு ஆதாரமும் சேகரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு சம்பந்தமாக நல்கொண்டா நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சூழலில், நல்கொண்டா நீதிமன்றம் A2 சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை விதித்தது. மேலும், எஸ்சி மற்றும் எஸ்டி அமர்வு நீதிமன்றத்தின் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக, இந்த தண்டனை பிரிவுகள் 302, 120 ஐபிசி, 109, 1989 ஐபிசி மற்றும் இந்திய ஆயுதச் சட்டம், 1959 ஆகியவற்றின் கீழ் விதிக்கப்பட்டது.

தற்பொழுது, பிரணாய் வழக்கில் நல்கொண்டா நீதிமன்றம்  இறுதித் தீர்ப்பை வெளியிட்ட பிறகு, இந்த தீர்ப்புக்கு தெலுங்கானா மாநிலத்தில் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:MiryalagudaTelangana honour killingPranay Murder Case