- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
என்னதான் ஆச்சு? ஹாட்ரிக் தோல்வியில் அதிரடி ஹைதராபாத்! சரிவுக்கு முக்கிய காரணங்கள்...
தொடர்ச்சியாக 3 போட்டிகள் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணி புள்ளி விவர பட்டியலில் 10-வது இடத்திற்கு சென்றுள்ளது.

Author: Bala Murugan K
Published: April 4, 2025
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி தொடர்ந்துஹாட்ரிக் தோல்வி சந்தித்து அணியின் உரிமையாளர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "அதிரடி ஹைதராபாத்" என்று பெயர் பெற்ற இந்த அணி, இந்த சீசனின் ஆரம்பத்தில் முதல் போட்டியில் அதிரடியாக விளையாடியது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான அந்த போட்டியில் 286 ரன்கள் குவித்திருந்தது. அதே பார்மில் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்ததாக லக்னோ, டெல்லி, கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் படு தோல்வியை சந்தித்து புள்ளி விவரபட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.
ஹாட்ரிக் தோல்விக்கு முக்கிய காரணங்கள்:
பேட்டிங்
ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசை, தீ பொறி போல பயங்கரமாக இருந்தாலும், சமீபத்திய போட்டிகளில் சீரான செயல்பாடு இல்லை. உதாரணமாக, மார்ச் 27, 2025 அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிராக 5 விக்கெட் தோல்வியடைந்த போட்டியில், SRH 169 ரன்களை மட்டுமே எடுத்தது, லக்னோ அதை எளிதாக துரத்தியது. ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் தொடர்ந்து சொதப்பினர்.
தொடக்கம் சொதப்பல்
அதைப்போல ஹைதராபாத் அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்கவேண்டும் என்றால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கும் அபிஷேக் சர்மா, ஹெட் இருவரும் ஒரு தரமான பார்ட்னர்ஷிப் கொடுக்கவேண்டும். ஆனால், கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு அவர்கள் பார்ட்னர்ஷிப் இல்லாத காரணத்தால் அணி சற்று திணறி வருகிறது.
பந்துவீச்சு பலவீனம்:
அதைப்போல முக்கிய காரணமாக சொல்லவேண்டும் என்றால் பந்துவீச்சு சரியில்லை. குறிப்பாக, மார்ச் 30, 2025 அன்று டெல்லி கேபிடல்ஸ் (DC) அணிக்கு எதிரான போட்டியில், SRH 167 ரன்கள் முடித்திருந்தது. அந்த இலக்கை சமாளிக்க வேண்டும் என்றால் சரியான பந்துவீச்சு வேண்டும். ஆனால் அது இல்லை என்ற காரணத்தால் டெல்லி அணி சர்வ சாதாரணாமாக 16 ஓவர்களில் வெற்றிபெற்றுவிட்டது. புவனேஷ்வர் குமார் மற்றும் பாட் கம்மன்ஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதிக நம்பிக்கை:
SRH அணி தங்களது "300 ரன்" இலக்கு மனநிலையால் அதிக நம்பிக்கையில் இருந்தது, ஒருவர் அவுட் ஆனால் கூட அணியின் நிலைமையை புரிந்துகொண்ட மற்ற வீரர்கள் விளையாடமாட்டிக்கிறார்கள். உடனடியாக நானும் அதிரடியாக தான் விளையாடுவேன் என கூறி அதிரடி ஷார்ட்ஸ் அடிக்க முயன்று அவுட் ஆகுகிறார்கள். இதுவும் அவர்களுடைய அணி தோல்விக்கு முக்கிய காரணம் எனவும் நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.