UPI-ல் தவறான மொபைல் எண்களுக்கு குட் பை! NPCI புதிய உத்தரவு!
UPI ID-யில் பயனர் குறிப்பிட்டுள்ள மொபைல் நம்பரை குறிப்பிட்ட இடைவெளியில் ஆன்லைன் வழியாக மறு பரிசோதனை செய்ய வேண்டும் NPCI உத்தரவிட்டுள்ளது.

Author: M Manikandan
Published: March 6, 2025
தற்போதைய ஸ்மார்ட் போன் யுகத்தில் நேரடி ரொக்க பணபரிவர்த்தனையை விட ஆன்லைன் வழியாக UPI, NEFT போன்ற இணையதள பரிவர்த்தனை வாயிலாக பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறுகின்றன. அதிலும் பெரும்பாலான பரிவர்த்தனைகள் UPI பரிவர்த்தனைகள் ஆகும்.
Advertisement
கூகுள் பே , போன் பே உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளில் UPI ID உருவாக்கம் செய்யும் போது வங்கி கணக்கு எண் மற்றும் மொபைல் நம்பர் தேவைப்படும். அந்த மொபைல் எண்ணை கொண்டு ஒரு முறை பதிவு செய்தலே போதுமானது. அதன் பிறகு அந்த சிம் மொபைலில் இல்லை என்றாலும் UPI ID செயல்படும்.
செயலியை அழித்துவிட்டு மீண்டும் மொபைலில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே அதே மொபைல் எண் கேட்கும். இதனால் சில பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத எண்களில் UPI ID உருவாக்கம் செய்து UPI கணக்குகளை அப்படியே பயன்படுத்தி வருகின்றனர். சிலர் UPI தொடங்கிய மொபைல் நம்பரை தொலைத்துவிட்டு வேறு நம்பர் பயன்படுத்தி வருவர். ஆனால் UPI ID பழைய நம்பரில் இயங்கும். இதனால் சில பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு ஆன்லைன் பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தும் NPCI ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
Advertisement
அதாவது, UPI ID உருவாக்கம் செய்த மொபைல் நம்பரை குறிப்பிட்ட இடைவெளியில் வங்கி அல்லது நிதி பரிவர்த்தனை செயலி நிறுவனங்கள் மீண்டும் செக் செய்து புதுப்பிக்க வேண்டும் என NPCI உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது வரும் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
Advertisement
NPCI உத்தரவில்..,
UPI மொபைல் எண் வழிகாட்டுதல்கள் :
1. வங்கிகள், பரிவர்த்தனை ஆப்கள் உள்ள மொபைல் எண்களை குறிப்பிட்ட இடைவெளியில், குறைந்தபட்சம் வாராந்திர அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது மாற்றப்பட்ட மொபைல் எண்களின் செயல்பாடு, அழிந்த மொபைல் எண்களால் ஏற்படும் பரிவர்த்தனை குறைபாடுகளை இது குறைக்கும்.
2. பயனர் அனுமதியுடன் UPI மொபைல் எண்ணை சோதனை செய்யவும், நம்பரை அழிக்கவும், UPI ID நம்பரை மாறுவதற்கும் UPI செயலி அனுமதிக்க வேண்டும்.
3. இந்த செயல்முறையை பரிவர்த்தனைக்கு முன்போ அல்லது பரிவர்த்தனையின் போதோ செயல்படுத்துவதற்கு அனுமதியில்லை.
4.UPI மொபைல் எண்கள் தொடர்பான தகவல் தொடர்புகள் தெளிவாக இருக்க வேண்டும்.
இந்த உத்தரவுகளுக்கு அனைத்து வங்கி மற்றும் UPI செயலி நிர்வாகங்களும் 31 மார்ச் 2025க்கு முன் இணங்குமாறு NPCI அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஏப்ரல் 1 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments yet.
