தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / தமிழ்நாடு

இந்தியாவில் அடுத்த மாடலை களமிறக்கிய சாம்சங்! Samsung Galaxy A56 பெஸ்ட்டா? A55 பெஸ்ட்டா?

AMOLED டிஸ்பிளேவுடன் 5000mAh பேட்டரி வசதியை கொண்டுள்ள Samsung Galaxy A56 5G போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News Image

Author: Bala Murugan K

Published: March 5, 2025

சாம்சங் நிறுவனம் தனது Galaxy A56 5G மாடலை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பிரீமியம் அம்சங்கள், புதிய Exynos 1580 சிப்செட், மேம்படுத்தப்பட்ட கேமரா, அதிகபட்ச 12GB RAM மற்றும் 45W அதிவேக சார்ஜிங் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. இந்த போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட Galaxy A55 5G விட பெஸ்ட்டா என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

Samsung Galaxy A56 சிறப்பு அம்சங்கள் 

டிஸ்பிளே : Galaxy A56 5G மாடல் 6.7 இன்ச் அளவிலான Super AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை வழங்குகிறது. எனவே, உபயோகம் செய்யும்போது ஸ்க்ரோல் செய்தால் கூட டீசண்டாக இருக்கும். அதைப்போல, டிஸ்பிளே Corning Gorilla Glass Victus+ -ஐ கொண்டுள்ள காரணத்தால் கீழே விழுந்தாலும் கூட பெரிய அளவில் போனுக்கு எதுவும் சேதம் ஏற்படாது. 

கேமரா அம்சங்கள் : Galaxy A56 5G மாடல் திரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. 50 எம்பி பிரதான சென்சார் (OIS உடன்) வருகிறது. எனவே,  குறைந்த ஒளியிலும் மிகத் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது.12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் – 123 டிகிரி வயிட்-ஆங்கில் ஷாட்களை எடுக்க உதவும்.

5MP மேக்ரோ லென்ஸ் – மிக நுணுக்கமான சிறிய பொருள்களை பதிவு செய்யும் திறன். முன்புற செல்ஃபி கேமராக 12MP சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது AI Beauty Mode, 4K வீடியோ பதிவு போன்ற அம்சங்களுடன் வருகிறது.

பேட்டரி மற்றும் சார்ஜிங்

Galaxy A56 5G மாடலில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது இரண்டு நாட்களுக்கு அதிகபட்சம் நீடிக்கும். 45வார்ட்ஸ் பாஸ்ட் ஜார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. இதன் மூலம் 30 நிமிடங்களில் 60% வரை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜிங்கிற்கு USB Type-C போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

 கூடுதல் அம்சங்கள்

5G, 4G VoLTE, Wi-Fi 6E, Bluetooth 5.3 ஆகியவை உள்ளன.

In-Display Fingerprint Sensor வழங்கப்பட்டுள்ளது. 

அறிமுகம் மற்றும் விலை

இப்படியான சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கும் Galaxy A56 5G போன் ஆனது கடந்த மார்ச் 2-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகிவிட்டது. பலரும் இந்த போனை வாங்கவேண்டும் என்று தேடிக்கொண்டும் இருக்கிறார்கள். ஏற்கனவே அறிமுகமாகிவிட்டது என்பதால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று கூட வாங்கிக்கொள்ளலாம். விலை பொறுத்தவரையில் 8GB RAM + 128GB Storage – ரூ.41,999, 8GB RAM + 256GB Storage – ரூ.44,999, 12GB RAM + 256GB Storage – ரூ.47,999 ஆகிய விலையில் கிடைக்கும். 

A55 பெஸ்டா? A56 பெஸ்டா?
பலருடைய கேள்வியாக இருக்கும் விஷயம் என்னவென்றால், இப்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் A56 பெஸ்டா? அல்லது அதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட A65 பெஸ்டா? என்பது தான். அப்படி யோசிப்பவர்களுக்காகவே கீழே இரண்டையும் ஒப்பிட்டு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

 டிஸ்பிளே:

  • கேலக்ஸி A55: 6.6 இன்ச் FHD+ Super AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரஷ் ரேட்.
  • கேலக்ஸி A56: 6.7 இன்ச் FHD+ Super AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரஷ் ரேட்.

ப்ராசஸர்:

  • கேலக்ஸி A55: Exynos 1380 சிப்செட்.
  • கேலக்ஸி A56: Exynos 1580 சிப்செட்.

கேமரா:

  • கேலக்ஸி A55: பின்புறத்தில் 50MP பிரதான கேமரா (OIS உடன்), 12MP அல்ட்ரா-வைட், 5MP மேக்ரோ; முன்புறத்தில் 32MP செல்ஃபி கேமரா.
  • கேலக்ஸி A56: பின்புறத்தில் 50MP பிரதான கேமரா (OIS உடன்), 12MP அல்ட்ரா-வைட், 5MP மேக்ரோ; முன்புறத்தில் 12MP செல்ஃபி கேமரா.

பேட்டரி:

  • கேலக்ஸி A55: 5000mAh, 25W அதிவேக சார்ஜிங்.
  • கேலக்ஸி A56: 5000mAh, 45W அதிவேக சார்ஜிங்.

இரண்டிலும் ஆண்ட்ராய்டு 15, One UI 7.0. தான் உள்ளது. கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தாலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள A56-யில் கூடுதலாகவே சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

விலை :

  • கேலக்ஸி A55: ரூ.34,999 முதல்.
  • கேலக்ஸி A56: ரூ.41,999 முதல்.

இரண்டில் எதை தேர்வு செய்யலாம்? 

குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை விரும்பினால், கேலக்ஸி A55 போனை நீங்கள் தேர்வு செய்யலாம். மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகமான சார்ஜிங் வசதி வேண்டும் என்றாலும் ப்ராசஸர் மற்றும் அதிவேக சார்ஜிங் திறனை விரும்பினால், கேலக்ஸி A56 சிறந்த தேர்வு எனவும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். உங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டினை பொருத்து, இந்த இரு மாடல்களிலும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்

Tags:Samsung Galaxy A56 vs Samsung Galaxy A55Samsung Galaxy A55Samsung Galaxy A56Samsung