தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Saturday, Nov 15, 2025 | India
Home / இந்தியா

பிரதமர் மோடி வாழ்க்கைக்கு பின்னால் இவ்வளவு சோககங்களா? அவரே சொன்ன வறுமை கதை!

சிறிய வயதில் தான் சந்தித்த வறுமைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

News Image

Author: Bala Murugan K

Published: March 17, 2025

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க போட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுக்கு அளித்த பேட்டியில் தன் சிறுவயது அனுபவங்களை பகிர்ந்தார். மிகுந்த வறுமையில் பள்ளிப்படிப்பு தொடர்ந்ததாக கூறிய மோடி, அப்போது பணக்குறைவால் தனது வெள்ளை கேன்வாஸ் ஷூக்களுக்கு பொளிஷ் வாங்க முடியாது என்பதால, பள்ளியில் கிடைத்த சாக் துண்டுகளை சேகரித்து, அதை தண்ணீரில் கரைத்து செருப்பை சுத்தம் செய்ததாக தன்னுடைய வறுமையான விஷயங்களை நினைவு கூர்ந்து பேசினார். 

Advertisement

கஷ்டப்பட்ட தந்தை 

அந்த பேட்டியில் பேசிய பிரதமர் மோடி " என்னுடைய தந்தை சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி தான் குடும்பத்தை வழிநடத்தினார். நான் என்னுடைய வேலைகளை முடித்த பிறகு என்னுடைய அப்பாவின் டீக்கடைக்கு சென்று அவருக்கு உதவி செய்வேன். அப்போது தான் என்னுடைய தந்தை எவ்வளவு கஷ்டபடுகிறார் என்பது மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை என்னால் சுலபமாக புரிந்து கொள்ள முடிந்தது. அதைப்போல, என்னுடைய அம்மா  பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி பிறருக்கு உதவுவதைப் பார்த்து வளர்ந்தேன் என்பதால் நானும் பலருக்கு உதவவேண்டும் என விரும்பினேன். சமூக சேவைகளும் செய்யவேண்டும் என்கிற எண்ணமும் எனக்கு அப்போது தான் வந்தது” எனவும் மோடி தெரிவித்தார். 

Advertisement

வறுமை வாழ்க்கைக்கு தந்த பாடங்கள் 

நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது என்னுடைய வெள்ளை ஷூவை பாலிஷ் செய்வதற்காக வெள்ளை சுண்ணாம்புகளை சேகரித்தேன். அந்த ஷூவை எனக்கு என்னுடைய மாமா வாங்கிக்கொடுத்தார். எனவே, ஒரே ஒரு ஷூ மட்டுமே என்னிடம் இருந்த காரணத்தால் அதனை சுண்ணாம்பு வைத்து சுத்தம் செய்தேன். அதில் இருந்து வாழ்கை என்றால் என்னென்ன இருக்கிறது நன்றியுடன் எப்படி இருக்கவேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். சிறுவயதில் சந்தித்த போராட்டங்கள் தான் பின்னர் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள உதவியது என்றும் பிரதமர் மோடி பேசினார். 

Advertisement

குஜராத்தின் மேசானா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகரைப் பற்றியும் அவர் பேசினார். தனது ஆரம்பக் கல்வி அங்கு நடந்ததாகக் கூறினார். தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி நினைவுகூர்ந்த அவர், வத்நகரின் வளமான வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியம் தனக்கு எப்படி தெரியவந்தது என்பது குறித்தும் பேசினார். 

கலாச்சார பாரம்பரியம் பற்றி 

இது குறித்து பேசிய அவர் " நான் பள்ளியில் படிக்கும் போது, ​​எங்கள் கிராமத்தில் ஒரு பெரியவர் இருந்தார், அவர் மாணவர்களிடம் வழக்கமாகச் சொல்வார்: 'குழந்தைகளே, நீங்கள் எங்கு சென்றாலும் கேளுங்கள், நீங்கள் ஒரு செதுக்கப்பட்ட கல்லையோ அல்லது அதில் எழுத்துகள் உள்ள ஒரு கல்லையோ பார்த்தீர்கள் என்றால், அதைக் கொண்டு வந்து பள்ளியின் இந்த மூலையில் வைக்கவும்'," என்று அவர் கூறினார்.

அதுதான்  காலப்போக்கில் தனது ஆர்வம் அதிகரிக்க உதவியதாகவும், வரலாறு இருப்பதை உணர்ந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வத்நகரில் ஒரு முக்கிய புத்த மதக் கற்றல் மையமாக இருந்தபோது, ​​அங்கு வாழ்ந்த சீன தத்துவஞானி ஹியூன் சாங்கைப் பற்றி ஒரு சீனத் திரைப்படம் படித்ததை அவர் நினைவு கூர்ந்தார். மேலும், வறுமை ஒரு மனநிலையே தவிர, அது சாதனைக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதையும் இந்த அனுபவங்கள் மூலம் புரிந்துகொண்டதாக அவர் கூறி மக்களும் அப்படி கவலைப்படக்கூடாது எனவும் மோடி தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். 

Tags:modi life storynarendra modi life storyPM Narendra ModiNarendra Modi

No comments yet.

Leave a Comment