- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இதுதான் என் சம்பளமா? அதிருப்தியில் பாதி ஊழியர்கள்! வெளியான சர்வே ரிப்போர்ட்…
தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் பொதுவாக 47% ஊழியர்கள் தாங்கள் வாங்கும் ஊதியம் குறித்து அதிருப்தியில் உள்ளனர் என்றும், 25% பேருக்கு தங்கள் அந்த துறையின் சம்பள விகிதம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல், இது போதும் என்ற மனநிலையில் உள்ளார் என கூறப்பட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: March 2, 2025
பிரபல வேலைவாய்ப்பு தகவல் மையமான Foundit (formerly Monster APAC & ME) நிறுவனமானது பலதரப்பட்ட ஊழியர்களிடம் ஆய்வு நடத்தி அவர்களுக்கு, தாங்கள் செய்யும் வேலை பிடித்து இருக்கிறதா? தாங்கள் செய்யும் வேலையின் தரம் அறிந்து தான் ஊதியம் பெருகின்றனரா, அதற்கான விழிப்புணர்வு பெற்றுள்ளனரா என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கான பதில்களை தொகுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கை மூலம் கிடைப்பெற்ற தகவல் அடிப்படையில் கிட்டத்தட்ட 47% ஊழியர்கள் தங்களுக்கான ஊதிய உயர்வுகளில் அதிருப்தி அடைந்துள்ளனர். எதிர்பார்த்ததை விட குறைவான ஊதிய உயர்வுகள் கிடைப்பதால் தங்கள் எதிர்பார்ப்புகள் குறைவதாக புகார் கூறி வருகின்றனர் என இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 25% பேருக்கு தெளிவற்ற மனநிலையில் இந்த மந்தமான சம்பள உயர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனை ஒரு பெரிய பிரச்சனையாகவே அவர்கள் கருதவில்லை.
அதே போல, சிறந்த திறமையாளர்களை பணியமர்த்தவும் தக்கவைக்கவும் நிறுவனங்கள், திறன் மேம்பாடு, தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த ஊதிய தொகுப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பணிசூழல் மாறி வருகிறது. ஊழியர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவும், ஊழியர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தி நிலைப்பாட்டை குறைக்கவும் நிறுவனங்கள் தங்கள் ஊதிய உயர்வு யுக்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அனுபவ மட்டத்தில் சம்பள உணர்தல் :
பதிலளித்தவர்களில் 46% பேர் மட்டுமே தங்கள் சம்பளம் சராசரியை விட அதிகமாக இருப்பதாக நம்புகிறார்கள். 40% பேர் இது தங்கள் தகுதிக்கு கீழே இருப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக, 14% பேர் தங்கள் துறையில் சம்பள அளவுகோல்கள் பற்றி அறியாமல் உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, ஊழியர்கள் தங்கள் பணியில் அனுபவத்தைப் பெறும்போது தான் சம்பள விழிப்புணர்வு பற்றி அறிந்து கொள்கின்றனர்.
1.தொடக்க நிலை (3 ஆண்டுகள் வரை)
பாதிக்கும் மேற்பட்டவர்கள் (51%) சம்பள அளவுகோல்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். 31% பேர் குறைவான ஊதியம் பெறுவதாக உணர்கிறார்கள். இவர்கள் மத்தியில் அதிருப்தி உச்சத்தை எட்டுகிறது (42%).
2.4 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் :
மேற்கண்ட அதிருப்தி நிலைப்பாடு 26%ஆகக் குறைகிறது. இது சிறந்த சம்பளம் பற்றிய போதிய விழிப்புணரவை பிரதிபலிக்கிறது.
பெரும்பாலும் ஐடி ஊழியர்கள் (34%) மற்ற தொழில்துறை அளவுகோல்களை விட அதிகமாக சம்பாதிப்பதாக நம்புகிறார்கள்.
3. 7 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் :
ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி நிலைப்பாடு 18%ஆகக் குறைகிறது. 22% பேர் தங்கள் ஊதியத்தை தொழில் விதிமுறைகளை விட அதிகமாக பெறுவதாக கருதுகின்றனர். இதிலும் ஐடி ஊழியர்கள் முன்னணியில் உள்ளனர்.
4.11 வருடங்களுக்கு மேல் அனுபவம் :
18% மூத்த ஊழியர்கள் தங்கள் சம்பளமானது தொழில்துறை அளவுகோல்களை விட அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த கணக்கெடுப்பில் 47% அனுபவமிக்க ஊழியர்கள் தங்கள் சம்பள உயர்வில் மகிழ்ச்சியடையவில்லை எனக் கூறுகின்றனர். மேற்கண்ட கணக்கெடுப்பில் மிகப்பெரிய அதிருப்தி நிலை என்பது தொடக்க நிலை ஊழியர்களான அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவர்கள் மத்தியிலே உள்ளது.
ஐடி ஊழியர்களில் 26% பேர் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, 28% ஐடி ஊழியர்கள் திருப்தி அடைந்துள்ளனர். 25% பேர் நடுநிலையாக திருப்தியான மனநிலையில் இருக்கிறார்கள்.
எதிர்பார்பு
35% தொழில் வல்லுநர்கள் குறைந்தபட்ச உயர்வை மட்டுமே (0–10) எதிர்பார்க்கிறார்கள், இது பல்வேறு துறைகளில் சம்பள வளர்ச்சியின் பழமைவாத எதிர்பார்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது. அதில் 29% பேர் மிதமான வளர்ச்சியை (11–20%) எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், 14% பேர் குறிப்பிடத்தக்க உயர்வை (21–30%) கணித்துள்ளனர், இது சிறியதாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க பங்கை அதிக அதிகரிப்புகளை எதிர்பார்க்கிறது. 22% பேர் அதிக மதிப்பீட்டை (30%+) எதிர்பார்க்கிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது.