- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
2027 உலகக்கோப்பையை வாங்காம விடமாட்டாரு போல! ஓய்வு குறித்து ரோஹித் என்ன சொல்லிருக்காரு தெரியுமா?
ஓய்வு பெறுவதற்கு தனக்கு இப்போது எண்ணமில்லை என ரோஹித் சர்மா விளக்கம் அளித்து பேசியுள்ளார்.

Author: Bala Murugan K
Published: March 10, 2025
இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியை வென்று கொடுத்த பிறகு சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அடுத்ததாக ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.
இந்த கவலையை அதிகப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் கடந்த ஜனவரி மாதம் முதலே ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பிறகு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் எனவும், அதற்கு பிறகு..ஒரு வேலை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றிபெற்றுவிட்டது என்றால் நிச்சயமாக ஓய்வு பெறுவார் வெற்றிபெறவில்லை என்றால் ஓய்வை அறிவிக்கமாட்டார் எனவும் தகவல்கள் பரவியது.
இதன் காரணமாவே ரோஹித் ஷர்மாவின் ஓய்வு குறித்த செய்தி தான் ஹாட் ட்ரென்டிங் டாப்பிக்காகவும் இருந்து வந்தது. இது உண்மையான தகவலா? அல்லது வதந்தியாக பரவும் தகவலா? என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
ரோஹித் ஷர்மாவின் விளக்கம்
இந்த செய்திகளுக்கு மத்தியில் ரோஹித் சர்மா தெளிவான விளக்கத்தை அளித்து ஓய்வு குறித்து பரவும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றநிலையில், மகிழ்ச்சியுடன் நேற்று செய்தியாளர்களுக்கு ரோஹித் சர்மா பேட்டி கொடுத்தார்.
அப்போது ஓய்வு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா “ நான் எங்கேயும் செல்லவில்லை…இங்கே தான் இருக்கப்போகிறேன்..என்னுடைய ஓய்வு குறித்து பரவி வரும் தகவலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். நான் சொல்லிக்கொள்வது ஒன்னுதான் இப்போது நான் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவிரும்பவில்லை. எனவே, என்னுடைய ஓய்வு குறித்து வதந்தி தகவலை பரப்பவேண்டாம்” எனவும் ரோஹித் சர்மா பேசினார்.
2027 உலகக்கோப்பை
ரோஹித் சர்மா ஏற்கனவே அவருடைய தலைமையில் இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி வாங்கிக்கொடுத்துவிட்டார். இன்னும் அவருடைய தலைமையில் ஒரு நாள் உலகக்கோப்பை மட்டும் இன்னும் இந்திய அணி வாங்கவில்லை. வருகின்ற 2027-ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி நடைபெறவிருக்கிறது. எனவே, ரோஹித் சர்மா இப்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்கவில்லை என்ற காரணத்தால் அந்த போட்டியிலும் விளையாடி கோப்பையை வென்று கொடுப்பார் எனவும் ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள்.
எனவே, அதுவரை ஓய்வு பெறாமல் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக விளையாடுவாரா? அல்லது அடுத்த ஆண்டு ஓய்வை அறிவிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.