தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

லாட்டரி பரிசுத்தொகை தாமதம்! இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

லாட்டரி பரிசுத் தொகையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தாமதப்படுத்தி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது கேரள மாநில எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் ஆணையம்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: February 10, 2025

புகார்தாரர் கடந்த 2020-ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் - புத்தாண்டு பம்பர் லாட்டரியை வாங்கியுள்ளார். அதில், அவருக்கு 3வது பரிசுத்தொகையான ரூ.10 லட்சம் விழுந்துள்ளது. இதனை வாங்கிக்கொள்ள உத்யோகமண்டல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேவையான ஆவணத்தை அளித்ததாக கூறியுள்ளார். ஆனாலும், பரிசு தொகை 151 நாட்கள் தாமதமாக கிடைக்கப்பெற்றதாக கூறியுள்ளார். 

 

இது தொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை மீது எர்ணாகுளம் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார் புகார்தாரர். சரியான ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகு வங்கியானது அடுத்த 30 நாட்களுக்குள் பரிசுத்தொகையை அனுப்ப வேண்டும். ஆனால், வங்கி நிர்வாக குறைபாடு காரணமாக தனக்கு பரிசுத்தொகை கிடைக்க தாமதம் ஏற்பட்டதாக புகார்தாரர் குற்றம்சாட்டினார்.

 

இந்த பரிசுத்தொகை தாமதத்தினால் தனக்கு கடுமையான மன அழுத்தம் மற்றும் உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், இதனால் இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் புகார்தாரர் நுகர்வோர் ஆணையத்தில் கூறினார். இதற்காக ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க கோரி வங்கிக்கும் கேரள லாட்டரி இயக்குநருக்கும் பல புகார்களை மனுதாரர் அனுப்யுள்ளார். பின்னர், வங்கியின் சேவைக் குறைபாட்டை சுட்டிக்காட்டி இழப்பீடாக ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையத்தை மனுதாரர் அணுகியுள்ளார்.

வங்கி தரப்பு வாதம் : 

இந்தப் புகார் வழக்கமான நுகர்வோர் சேவைப் பிரச்சினை இல்லை எனவும், இதனால் இது நுகர்வோர் பிரச்சனை ஆகாது என IOB வங்கி தரப்பு வாதிட்டது. கோவிட்-19 ஊரடங்கு காரணமாக ஆவணங்களை திருவனந்தபுரம் பிரதான தலைமை கிளைக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது என வங்கி தரப்பு விளக்கம் அளித்தது. ஆகஸ்ட் 25, 2020 அன்று புகார்தாரர் தனது லாட்டரி பரிசின் நிலை குறித்து விசாரித்ததாகவும், உரிய சரிபார்ப்புக்குப் பிறகு, வங்கி கூடுதல் ஆவணங்களைக் கோரியதாகவும், அவை புகார்தாரரால் செப்டம்பர் 3, 2020 அன்று சமர்ப்பிக்கப்பட்டதாகவும் வங்கியின் வழக்கறிஞர் ஆணையத்தில் கூறினார். இந்த ஆவணங்கள் செப்டம்பர் 4, 2020 அன்று லாட்டரி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். 

லாட்டரி அலுவலகம் விண்ணப்பத்தை பரிசீலித்த பிறகு, மார்ச் 15, 2021 அன்று புகார்தாரரின் கணக்கில் ரூ.6,30,000 பரிசுத் தொகை வரவு வைக்கப்பட்டதாக வங்கி தரப்பு விளக்கமளித்தது. 

இழப்பீடாக ரூ.10 ஆயிரம் : 

உரிய அரசு ஆவண ஒப்புதல்கள் தேவைப்பட்டதாலும், திருவனந்தபுரத்தில் மூன்று முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும் இந்த பரிசுத்தொகை செயலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டது என வங்கி தரப்பு கூறியது. வங்கி குறைதீர்ப்பாளரிடம் புகார் அளித்த பிறகு, இழப்பீடாக புகார்தாரரின் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளதாக வங்கி குறிப்பிட்டது.

விசாரணை :  

இரு தரப்பு ஆதாரங்களையும் மதிப்பாய்வு செய்த பிறகு, புகார்தாரருக்கு தாமதத்திற்கான இழப்பீடாக ரூ.10 ஆயிரம் கிடைத்ததை ஆணையம் மேற்கோள்காட்டியது. 118 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு, பரிசுத் தொகை ஜனவரி 19, 2021 அன்று அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது என்பதையும் அது குறிப்பிட்டது. இருப்பினும், இந்த தாமதமானது, புகார்தாரர் தான் உரிய ஆவணங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என குறிப்பிட்டது. தேவையான ஆவணங்கள் கிடைத்தவுடன், தேவைக்கேற்ப பரிசுத் தொகை 30 நாட்களுக்குள் வழங்கப்பட்டது என நுகர்வோர் ஆணையம் குறிப்பிட்டது. 

வழக்கு தள்ளுபடி : 

புகார்தாரர் ஆரம்பத்தில் முழுமையான ஆவணங்களை வழங்கத் தவறியதால் தாமதம் ஏற்பட்டது. எனவே IOB வங்கியின் சேவையில் எந்தக் குறைபாடும் இல்லை என்று நுகர்வோர் ஆணையம் முடிவு செய்தது. எனவே, புகார் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என எர்ணாகுளம் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. 

Tags:Kerala LotteryErnakulam Consumer DisputesKeralaErnakulamIOBIndian Overseas Bank