- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
தப்பு தப்புதான்!! விக்கெட்டெடுத்து நோட்புக் கொண்டாட்டம்.., லக்னோ வீரருக்கு 25% அபராதம்.!
பஞ்சாப் வீரர் ப்ரியன்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு லக்னோ வீரர் திக்வேஷ் ராதி செய்த செலிபிரேசனுக்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 25% அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்.

Author: Gowtham
Published: April 2, 2025
LSG மற்றும் PBKS இடையேயான போட்டியில் திக்வேஷ் ரதியின் 'நோட்புக்' கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது. லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்ததற்கு, லக்னோவின் சொந்த மைதானத்தில் 18 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.
இந்தப் போட்டியில் பஞ்சாப் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை லக்னோவின் திக்வேஷ் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். லக்னோ பவுலர் டிக்வேஷ் ரதி பஞ்சாப் அணி வீரர் பிரியான்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் செய்த நோட்புக் செலிபிரேஷன் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஸ்டைல் செலிபிரேஷன் கோலி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோரால் பிரபலமடைந்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி இப்படித்தான் கொண்டாடினார். இருப்பினும், டிக்வேஷ் ரதியை அம்பயர் எச்சரித்தார். மேலும், அவரின் செலிபிரேஷனுக்கு போட்டியின் கட்டணத்தில் இருந்து 25% அபராதம் மற்றும் ஒரு Demerit பாய்ண்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது கொண்டாட்டம் பிரபல கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கருக்குப் பிடிக்கவில்லை. நேற்றைய தினம் வர்ணனையின் போது, கவாஸ்கர், "ஒரு பேட்ஸ்மேன் முந்தைய பந்தில் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்த பிறகு நீங்கள் விக்கெட் எடுத்தால், அதை ஒரு கொண்டாட்டமாகக் கருதலாம். ஒரு பந்து வீச்சாளராக, உங்களுக்கு ஆறு பந்துகள் உள்ளன, நீங்கள் ஐந்து டாட் பந்துகளை வீசி ஆறாவது பந்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், அதுபோன்ற ஒன்றைச் செய்வது புரிந்துகொள்ள முடியாதது. இதுபோன்ற சைகைகள் நீங்கள் விக்கெட் எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்பதைக் குறிக்கிறது" என்று கூறினார்.