- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வருகைப்பதிவு குறைவு., தேர்வெழுத அனுமதிக்க முடியாது! உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!
வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது முறையாக வருகைப் பதிவை வைத்திருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Author: Santhosh Raj KM
Published: February 22, 2025
SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (SRMIST) கல்லூரியில் B.Com படிக்கும் மாணவன் வருகைப் பதிவு குறைவாக இருந்துள்ளதால், கல்லூரி நிர்வாகம் அவர் செமஸ்டர் தேர்வெழுதவும், 2024-2025 கல்வி ஆண்டுக்கான வகுப்பை தொடரவும் அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளனர். இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து கல்லூரி மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து கல்லூரி மாணவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்த மனு மீது விசாரிக்க மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், இந்த மனு விசாரணை பிப்ரவரி 20-ஆம் தேதி நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதம் :
U.G.C யின் விதிமுறையின்படி மாணவர்கள் குறைந்தது 75% வருகைப் பதிவை வைத்திருக்க வேண்டும். மாணவனின் வருகை 57% தான் இருக்கிறது. விதிவிலக்கு 10% கணக்கில் எடுத்து கொண்டாலும் 67% தான் வருகிறது என்றார்
அப்போது, மாணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மேற்கோள் காட்டி, மாணவரை தேர்வெழுத அனுமதிக்கும்படி நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
நீதிபதி அமர்வு உத்தரவு :
ஆனால் மாணவர் தரப்பு வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். மேலும் , கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அளவு வருகைப் பதிவு இல்லாத மாணவர்கள் தேர்வெழுத முடியாது என்று பல்கலைக்கழக மானியக்குழு கூறும் நிலையில் வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது முறையாகாது என்றும்
வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது, முறையாக வருகைப் பதிவை வைத்திருக்கும் மாணவர்களின் நிலையை கேலிக்குள்ளாக்கும் வகையில் இருக்கும் என அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், மாணவர் உரிய கட்டணத்தை செலுத்தி மீண்டும் படிப்பை தொடர விரும்பினால் அதற்கு பல்கலைகழகம் அனுமதியளிக்க வேண்டுமென பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு மாணவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தனர்.