- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மோடி கார்ட்டூன் விவகாரம்! விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உத்தரவு!
ஆனந்த விகடனின் இணையதள பக்கம் முடக்கப்பட்டதை நீக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 6) உத்தரவிட்டுள்ளது.

Author: Santhosh Raj KM
Published: March 6, 2025
கடந்த பிப்ரவரி 10ம் தேதி, பிரபல செய்தி ஊடகமான விகடன் இணைய இதழான 'விகடன் ப்ளஸ்' இதழில், அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதும், பிரதமர் மோடி அதைப் பற்றி பேசாமல் இருந்ததும் குறிக்கும் வகையில் ஒரு கார்ட்டூன் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதனால் பா.ஜ.க. ஆதரவாளர்கள் விகடன் இணையதளத்தை கடுமையாக விமர்சித்தனர்.
அது மற்றும் இன்றி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசுக்கு புகார் அளித்தார். இதை தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் விகடன் இணையதளம் பிப்ரவரி 15 ஆம் தேதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பும் வெளியானது.
விகடன் நிறுவனம் தரப்பில்
'நூற்றாண்டு காலமாச விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம். ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம்' என்று தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று ( 06 மார்ச்) விசாரணைக்கு வந்தது.
ஆனந்த விகடன் வழக்கறிஞர் தரப்பில்
"கார்ட்டூன் வெளியிட்டதற்காக இணையதளத்தை முடக்குவது என்பது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல்" என்றார் வாதித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த விகடன் இணையதள பக்கம் முடக்கப்பட்டதை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட கார்ட்டூனை நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆனந்த விகடனுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தில், குறிப்பிட்ட அந்த கார்ட்டூன் அரசியல் சாசனத்தின் பிரிவு 19(1)(a) வழங்கும் உரிமையான கருத்துச் சுதந்திரத்தின்படி பாதுகாக்கப்பட்ட ஒன்றா, அல்லது மத்திய அரசின் ஐடி சட்டத்தின் பிரிவு 69A-ன் படி தடை செய்யப்படக்கூடிய ஒன்றா என்பது குறித்த வழக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையின் கீழ் உள்ளது எனவும் விகடன் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று முடிந்ததை தொடர்ந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை சேர்ந்த மு.ஆசீப் ஊடகங்களை சந்தித்து பேசும்போது " சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு மிகவும் வரவேற்க தக்க திர்பபு நாங்கள் எதிபார்த்த தீர்ப்பு மத்திய அரசு எதேனும் முடக்கம் செய்கிறாது என்றார் எதற்காக இந்த முடக்கு என்றும் தெரிவிக்கவேண்டும் . அதற்கான கால அவகாசமும் கொடுக்க வேண்டும் ஆனால் அதை போல் எதுவும் செய்ய வில்லை இது ஒரு இயற்கை நீதி சட்டத்துக்கு உட்பட்டது.
இந்த முடக்கம் என்பது சட்டத்துக்கு புறம்பானது என்றும் முதலில் தண்டனை கொடுத்த விட்டு பிறகு விசாரித்து இருக்கிறார்கள் . ஐ.டி act ( IT act ) ல் உள்ள பிரிவு 69 எ என்பது மிக அபாயகரமான பிரிவு என்பதை இந்த முடக்கும் உனர்த்தி இருக்கிறது 69 எ குறித்த விசாரணையும் நடத்தப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.