- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
முதல் போட்டி சாமிக்கு விட்ருவாங்க...மோசமான சாதனை படைத்த மும்பை, ரோஹித் சர்மா!
ஐபிஎல் வரலாற்றில் அதிகம் டக் அவுட் ஆன வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்திருக்கிறார்.

Author: Bala Murugan K
Published: March 24, 2025
சென்னை : ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 23-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மோதியது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என ரசிகர்கள் தெரியாமல் பரபரப்பாக இருந்த நிலையில், ஒருவழியாக போராடி சென்னை அணி வெற்றிபெற்றது. போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை சென்னை அணி தேர்வு செய்த நிலையில், முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த மும்பை அணி 20. ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கிய நிலையில் சென்னை அணி போட்டியை எளிமையாக வெற்றிபெறவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த அளவுக்கு கடைசி வரை பரபரப்பான கட்டத்தில் சென்றது. பின் ஒரு வழியாக வீரர்கள் பொறுமையாக களத்தில் நின்று விளையாடிய காரணமாக சென்னை 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் மும்பை அணியின் மோசமான சாதனையும் தொடர்கிறது.
என்ன சாதனை?
மும்பை இந்தியன்ஸ் கடந்த 13 ஆண்டுகளாக ஐபிஎல் சீசன் தொடக்கப் போட்டியில் தோல்வியையே சந்தித்து வருகிறது. கடந்த 13 வருடங்களில் ஒரு முறை கூட மும்பை அணி தங்களுடைய முதல் போட்டியில் வெற்றிபெற்றது இல்லை. இது இதுவரை எந்த அணிகளும் படைக்காத மோசமான சாதனைகளில் ஒன்றாகும். இதில் முக்கியமாக மும்பை தங்களுடைய பரம எதிரி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 2018, 2020 மற்றும் தற்போது 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
வழக்கம் போல இந்த முறையும் மும்பை அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில், ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் "எங்களுடைய அணி எப்போதும் முதல் போட்டி சாமிக்கு விட்ருவாங்க என்பது போல பேசியும் வருகிறார்கள்.
ரோஹி ஷர்மாவின் மோசமான சாதனை
இந்த போட்டியில் மும்பை அணி மற்றும் மோசமான சாதனையை தக்க வைத்துக்கொள்ளாமல் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் 0 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிகம் டக் அவுட் ஆன வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டி மட்டுமின்றி ஒரு சில சீசன்களில் ரோஹித் ஷர்மாவுக்கு சிறந்த போட்டிகளாக இருந்தது இல்லை என்றும் சொல்லலாம். உதாரணமாக 2023-ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார் . அதைப்போல 2022-ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2021: 19 ரன்கள் (RCBக்கு எதிராக)2020: 12 ரன்கள் (CSKக்கு எதிராக) என ரன்களை எடுத்திருந்தார்.