தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள்..! முழு விவரம் இதோ...

அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Image

Author: Gowtham

Published: March 14, 2025

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள், மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள், வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு, தொழில்துறை மேம்படுத்தும் அறிவிப்புகளும் இடம் பெற்று இருந்தன.

மேலும், இதில் அரசு ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அதன்படி, தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும் போது, உரிய வட்டிச் சலுகைகள் வழங்கிடவும் முக்கிய வங்கிகள் முன்வந்துள்ளன. 01.04.2026 முதல் அரசு ஊழியர்கள் 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும்.

மேலும், அரசு ஊழியர்கள் குறைந்த வாடகை வீட்டில் தங்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் நிதியாண்டில் 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.  மேலும், அரசு ஊழியர்களுக்கான EL சரண்டர் 15 நாள்களுக்கு பணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.

மாநிலத்தில் உள்ள தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்காக இதுவரை 27,858 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் இந்த அரசு பொறுப்பேற்ற 2% ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10,000 பணியிடங்களை நடப்பு நிதி ஆண்டிலேயே நிரப்பும்பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

அரசு அலுவலர் குறைந்த வாடகையிலான குடியிருப்புகளின் தேவை அதிகரித்து வருவதை நிறைவு செய்யும் வகையில், சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 147 கோடி ரூபாய் செலவில், மூன்று இலட்சம் சதுர அடி பரப்பளவில் 95 B மற்றும் 133 C வகை குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர் உறுப்பினர்களுக்கு இறக்க நேரிட்டால், குடும்ப தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில் நிதியுதவியாக 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டில், 31-01-2024 வரை, 19,134 ஓய்வூதியதாரர் குடும்ப உறுப்பினர்களுக்கு 96 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள் விபத்தில் இறந்தாலோ, உடல் இயலாமை அடைந்தாலோ தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடி நிதி வழங்கப்படும். விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் திருமண வயதை எட்டியுள்ள மகள்களின் திருமணச் செலவுகளுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் மகளின் உயர் கல்விக்கான உதவித் தொகையாகரூ.10 லட்சம் வரை வழங்கப்படும்.  அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:Tamil Nadu Budget 2025TN BudgetTN Budget 2025TN GovtBudget 2025