தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / தமிழ்நாடு

டாஸ்மாக் சோதனை தொடர்பான வழக்கில் வரும் 25ஆம் தேதி வரை நடவடிக்கை கூடாது- உயர் நீதிமன்றம்

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு எனும் அமலாக்கத்துறை வழக்கிற்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவில் மறுவிசாரணைக்கு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என அமலாக்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

News Image

Author: Santhosh Raj KM

Published: March 20, 2025

டாஸ்மாக் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட சோதனையில் கைபற்றப்பட்ட ஆவணங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என, 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அமலாக்கத்துறையின் அறிக்கை

தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது. கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது என்று அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .

இந்நிலையில் அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது இந்த  மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது

மனுதாரர் டாஸ்மாக் தரப்பில்

மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும்.விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையையும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிகாக வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது

மனுதாரர் டாஸ்மாக் தரப்பில் மனுவில்

மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும்.விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையையும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிகாக வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது

மனுதாரர் டாஸ்மாக் தரப்பு வாதம்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவு 17-ன் படி அமலாக்கத்துறை சோதனை அதிகாரம் குறித்து விளக்கி உள்ளது. சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டத்ற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் 

இருக்க வேண்டும் என்றும்  சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அமலாக்கத்துறை பிரிவு 17ன் படி எல்லா இடங்களிலும், ஆதாரங்கள் இல்லாமல் விசாரணை நடத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் .அதுமட்டுமின்றி 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்கத்துறையினர் சிறை பிடித்து வைத்துள்ளனர் என்றும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத்துறைக்கு நீதிபதியின் கேள்விக்ள்

- எதற்காக சோதனை நடத்தப்பட்டகிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தீர்களா?

-  இரவு நேரத்திலும் சோதனையா?

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை யின் பதில்

இரவில் நேரத்தில் சோதனை எதுவும் நடக்கவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை.யாரையும் துன்புறுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள்

எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும் என்று அமலாக்கத்துறை கேள்வி எழுப்பினார்

அமலாக்கத்துறைகு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் என்றும் இவ்விவகாரத்தில் மறுவிசாரணைக்கு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என  அமலாக்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tags:Enforcement Directoratetasmac casetasmactasmac issue