தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

உயருகிறதா ATM பரிவர்த்தனை கட்டணம்? NPCI பரிந்துரைகள் என்னென்ன?

பணவீக்கம், ஏடிஎம்-களின் பராமரிப்பு செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தற்போதுள்ள ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்த NPCI, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: February 7, 2025

தற்போதைய காலகட்டத்தில் ஏறக்குறைய அனைத்து பணபரிவர்தனைகளும் வங்கி சேவைகளின் வாயிலாகவே இருக்கிறது. ஆன்லைன் பணபரிவார்த்தனை, UPI என சென்றாலும் நடுத்தர மக்கள் பலரும் தற்போதும் ATM பயன்பாட்டையே பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் அடிக்கடி பணம் எடுத்து வருவதும் உண்டு. அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தற்போது ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. 

அது என்னவென்றால், பணவீக்கம், ஏடிஎம்-களின் பராமரிப்பு செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தற்போதுள்ள ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கட்டண உயர்வு ஏன்?

ஏடிஎம் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளன என்பதாழும், பணவீக்கம் அதிகமாகிய காரணத்தாலும்  இந்த கட்டண உயர்வு பரிசீலிக்கப்படுகிறது. வங்கிகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள், பணப் பரிமாற்றம், பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு செலவுகள் ஆகியவை உயர்ந்துள்ளதை காரணமாகக் கூறுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கடன் பெறும் செலவு 1.5 - 2% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் HDFC வங்கி அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவை RBI அமைத்தது. இந்த குழுவானது தனியார் மற்றும் அரசு வங்கிகளின் செலவுகளை ஆய்வு செய்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில், NPCI பரிந்துரைத்த கட்டண உயர்வு மெட்ரோ நகரங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டாலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சவால்களை அதிகம் கவனிக்க வேண்டும் என்று அந்த குழு பரிந்துரை செய்திருக்கிறது. 

கட்டணம் என்ன?

இந்தியாவிலுள்ள நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), அந்தந்த சொந்த வங்கி அளிக்கும் இலவச 5 ஏடிஎம் பரிவர்த்தனைகளைத் தாண்டி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.21 முதல் ரூ.22 ஆக கட்டண உயர்வு பரிந்துரைக்கின்றது. மேலும், ரொக்கம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.6 இருந்து ரூ.7 ஆக உயர்க்கலாம் எனவும் பரிந்துரை செய்கிறது.

RBI (இந்திய ரிசர்வ் வங்கி) மற்றும் NPCI இன் பரிந்துரைகள் தற்போது ஆய்வு செய்யப்படுகின்றன. இதன் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த மாற்றங்கள், குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டால், இலவச பரிவர்த்தனை வரம்பைத் தாண்டி ஏடிஎம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் அதிக செலவைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். வாழ்க்கைச் செலவுகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் அதிக கட்டணங்களை தவிர்க்க தங்கள் பரிவர்த்தனைகளை திட்டமிட்டு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

எதிர்பார்ப்புகள்

RBIயானது NPCI மற்றும் ATM இடைமாற்றக் கட்டணக் குழுவின் பரிந்துரைகளை தற்போது ஆய்வு செய்து வருகிறது. எந்த முடிவும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டால், இலவச வரம்புக்கு மேல் ஏடிஎம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே உயரும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக மக்கள் கவலையடைந்திருக்க, வங்கிகள் ஏடிஎம் பராமரிப்பு செலவுகளை சமாளிக்க கட்டண உயர்வு அவசியம் என்கிறார்கள்.

RBI இறுதி முடிவை எடுக்கும் வரை, வாடிக்கையாளர்கள் புதுப்பிப்புகளை கவனித்துக்கொண்டு, கூடுதல் கட்டணங்களை தவிர்க்க தங்கள் பணப்பரிவர்த்தனைகளை திட்டமிட அறிவுறுத்தப்படுகின்றனர்.விரைவில் உண்மையான கட்டண விவரம் என்ன என்பது பற்றிய அறிவிப்பும் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Tags:NCPIATMATM TransactionRBI