ஐயோ ராஷ்மிகா பத்தி நான் அப்படி சொல்லலையே! பதறி போய் பிளேட்டை மாற்றிய எம்எல்ஏ!
நான் ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்டவேண்டும் என்று தான் கூறினேன். பாடம் புகட்டவேண்டும் என்றால் அவரை தாக்குவது இல்லை என எம்.எல்.ஏ., ரவி குமார் பேசியிருக்கிறார்.

Author: Bala Murugan K
Published: March 11, 2025
நடிகை ரஷ்மிகாவின் பெயர் சமீபகாலமாக தலைப்பு செய்திகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக எம்.எல்.ஏ., ரவி குமார் கவுடா மாநிலத்தில் நடைபெறும் திரைப்பட விழாவிற்கான அழைப்பை நடிகை நிராகரித்ததாக குற்றம் சாட்டி பேசியிருந்தார். இதற்கு ரஷ்மிகா ரசிகர்கள் கடுமையாக கோபத்துடன் அவரை திட்டி வந்த நிலையில், தற்போது அவரே விளக்கம் அளித்தும் பேசியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்ப்போம்..
விழாவுக்கு அழைப்பு
ரஷ்மிகா இப்போது பெரிய நடிகையாக இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் கன்னட திரைப்படங்களில் தான் நடித்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். எனவே, கடந்த ஆண்டு பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ரஷ்மிகா மிகவும் பிஸியாக இருந்த காரணத்தால் அங்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது.
கடுப்பான எம்.எல்.ஏ
இதனையடுத்து நடிகை ரஷ்மிகா விழாவிற்கு வரவில்லை என்ற காரணத்தால் அவர் மீது கண்டனங்களை முன் வைத்து எம்.எல்.ஏ., ரவி குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசினார். இது குறித்து பேசிய அவர் “ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கூட உங்களால் வரமுடியாதா? வீட்டிற்குபோய் அழைத்தும் கூட உங்களால் வரமுடியவில்லை என்றால் என்ன அர்த்தம் நீங்கள் வளர்ந்த விதத்தை மறந்துவிட்டீர்கள்…கன்னட மொழியையும் புறக்கணித்து இதற்கு அர்த்தம். நிச்சயமாக இதற்கு நாம் அவருக்கு பாடம் புகட்டவேண்டும்” எனவும் எச்சரிக்கை விடுவது போல எம்.எல்.ஏ பேசினார்.
எழுந்த கண்டனங்கள்
அரசியலில் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு இப்படியா பேசுவது? எனவும், கண்டிப்பாக இப்படி பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதே சமயம், எம்.எல்.ஏ இப்படி பேசியிருந்த காரணத்தால் ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
அந்தர் பல்டி அடித்த எம்.எல்.ஏ
முதலில் எம்.எல்.ஏ கோபத்துடன் பேசிய நிலையில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது அப்படியே அந்தர் பல்டி அடிக்கும் வகையில் பேசியிருக்கிறார். ANI -செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் “ நான் ராஷ்மிகா மந்தனாவை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை. நான் அவருக்கு பாடம் புகட்டவேண்டும் என்று தான் கூறினேன். பாடம் புகட்டவேண்டும் என்றால் அவரை தாக்குவது இல்லை…அவருக்கு வாழ்க்கையில் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றிய படத்தை புகட்டுவேன் என்று தான் சொன்னேன்.
கடந்த ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கு ராஷ்மிகா மந்தனா அழைக்கப்பட்டபோது அவர் வரவில்லை. கன்னட மாநிலத்தில் இருக்கும் உணவை சாப்பிட்டு வளர்ந்த அவர் அதற்காகவாது வரவேண்டாமா? அதைத்தான் நான் அவரிடம் கேட்டேன். மற்றபடி வேறு எதுவும் சொல்லவில்லை" என சாந்தமாக பேசிவிட்டு ரவி குமார் கவுடா சென்றார். இதன் காரணமாக இந்த விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வருவது தெரியவந்துள்ளது.
No comments yet.