ஆன்லைன் விளையாட்டு - ஆதார், நேரக்கட்டுப்பாடு செல்லும்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

Author: Santhosh Raj KM
Published: June 3, 2025
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தடைவிதிக்க கட்டாயமாக்கியும், நேரக் கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி, நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த விதிமுறைகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்புரமணியம், ராஜசேகர் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட முடியாத வகையில் நேரக்கட்டுப்பாடு ஆன்லைன் விளையாட்டுகளை 18 வயதுக்கு குறைவானவர்கள் விளையாட தடை விதித்தும், தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாடும்போது ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் எச்சரிக்கை குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும் என்றும், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்து மட்டுமே விளையாட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதித்தும் தமிழக அரசு புதிதாக விதிகளை வகுத்து பிப்.14 அன்று அரசிதழில் வெளியிட்டது.
தமிழக அரசின் இந்த விதிகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி ப்ளே கேம்ஸ், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எகஸ்பர்ட் ப்ளேயர்ஸ் சங்கம் உள்ளிட்டவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன வழக்கு விசாரனையின் போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடைக்காலத் தடை கோரப்பட்டது ஆனால் நீதிபதிகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர்.
ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சார்பில் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பைக் கட்டாயப்படுத்தி நேரக்கட்டுப்பாடு விதித்த தமிழக அரசின் விதிகள் செல்லும் என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(ஜூன்2) தீர்ப்பு அளித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
Advertisement
No comments yet.
