- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
'ஒரு பாண்டியா மட்டுமே ஜெயிக்க முடியும்' - தம்பி ஹர்திக் குறித்து மனம் திறந்த க்ருணால்.!
மும்பை அணியின் கேப்டனும் தனது சகோதரனுமான ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது குறித்து, ஆர்சிபி வீரர் க்ருணால் பாண்ட்யா பேசியுள்ளார்.

Author: Gowtham
Published: April 8, 2025
ஐபிஎல்-லின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது, மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில், குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெற்றியை தனது அணியின் பக்கம் சாதகமாக மாற்றினார்.
மும்பை அணி கேப்டன் ஹார்டிக் பாண்ட்யா, 13வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்ததார். முதல் 5 பந்துகளில் இரண்டு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்தார். இதற்குப் பிறகு, அவர் தனது மூத்த சகோதரர் க்ருனாலின் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். மொத்தத்தில் 14 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த இந்த அதிரடி பேட்ஸ்மேனை ஹேசல்வுட் ஆட்டமிழக்கச் செய்து பெவிலினுக்கு அனுப்பினார்.
கடைசி ஓவரை வீசிய க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மும்பை அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டது, ஆனால் க்ருணாலின் முதல் பந்திலேயே மிட்செல் சாண்ட்னரை டிம் டேவிட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் தீபக் சாஹரின் விக்கெட்டை வீழ்த்திய அவர், ஐந்தாவது பந்தில் நமன் தீரை அவுட்டாக்கி போட்டியை முடித்தார்.
போட்டி முடிந்த பின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஹர்திக்கின் அண்ணன் க்ருணால், ''எங்களுக்குள் இருக்கும் பந்தம், ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று எனக்கு தெரியும். ஆனால் போட்டியின் முடிவில் ஏதாவது ஒரு பாண்ட்யா தோற்றாக வேண்டும். ஆனால், நாங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பும் பாசமும் மிகவும் இயல்பானது" என்று குறிப்பிட்டுள்ளார்.