தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.13,000 கோடி மோசடி வழக்கு : தொழிலதிபருக்கு புற்றுநோய்!

பஞ்சாப் நேஷனல் வங்கி பணமோசடி வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் மேஹுல் சொக்ஸி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், இதன் காரணமாக அவர் தற்போது பெல்ஜியத்தில் சிகிச்சை பெறுகிறார் எனவும் அவருடைய வழக்கறிஞர் மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

News Image

Author: Kanal Tamil Desk

Published: February 17, 2025

நாட்டையே  திரும்பி பார்க்க வைத்த வங்கி மோசடி வழக்குகளில் மிக முக்கிய வழக்கு என்றால் அது நகை வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெகுல் சோக்சி ( கீதாஞ்சலி ஜெம்ஸ் ) ஆகியோர் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவில் மோசடி செய்ததாக எழுந்த குற்றசாட்டு தான். இந்த வழக்கில் இரு நபர்களும் மோசடி  செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மத்திய விசாரணை அமைப்புகள் சார்பில் வழக்கு நடைபெற்று வருகிறது. 

வங்கி மோசடி வழக்கில் சிக்கிய மெஹுல் சோக்சி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு எதிரான விசாரணையில் நிவாரணம் கேட்டு  மும்பை நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் வாதிட்டார். அவருடைய உடல் நிலை, விசாரணை நிலை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.   

யார் இந்த மெஹுல் சோக்ஸி? 

மெஹுல் சோக்ஸி இந்தியாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர். அவர் பிரபலமான நகை நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் (Gitanjali Gems) நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இந்தியாவின் மிகப்பெரிய வங்கி பண மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) பண மோசடியில் தொடர்புடையவர் ஆவர். இதனால், அவர் மீது இந்திய அரசாங்கம் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது.

அவர் எங்கு உள்ளார்?

இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற பிறகு, அவர் ஆண்டிகுவா மற்றும் பார்புடா (Antigua and Barbuda) நாட்டின் குடியுரிமை பெற்றுக்கொண்டார். 2021ல் அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட, பின்னர் அவரை மீண்டும் இந்தியா கொண்டு வர அரசு  சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றது. ஆனால், அவர் இன்னும் இந்தியாவிற்கு திரும்பவில்லை.

தற்போது நடந்தது என்ன?

மெஹுல் சோக்ஸியின் வழக்கறிஞர் வாதிடுகையில், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பெல்ஜியத்தில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

விசாரணை 

மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற விசாரணையில், பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேஹுல் சோக்ஷி, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவிற்கு திரும்ப முடியவில்லை என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவில் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சில கும்பல் தாக்குதலுக்கு தான் உள்ளாகக்கூடும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார். இந்த காரணங்களை முன்வைத்து, தன்னுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்டை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.

மேஹுல் சோக்ஷி, PNB வங்கியில் ரூ.13,400 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இந்தியாவை விட்டு வெளியேறி, ஆண்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் குடியுரிமை பெற்றார். அவரை இந்தியாவிற்கு திரும்ப அழைக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அவர் தனது உடல்நலக்குறைவு மற்றும் உயிருக்கு ஆபத்து காரணங்களை முன்வைத்து, நீதிமன்றத்தில் பிடிவாரண்டை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.

பிடிவாரண்ட் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறதா? 

பிடிவாரண்டை ரத்து செய்ய வாய்ப்பு மிகவும் குறைவுதான். மாறாக, நீதிமன்றம் அவரது மருத்துவ நிலையை கண்காணிக்க கோரி ஒரு கண்காணிப்பு குழுவை நியமிக்கலாம் அல்லது சில மருத்துவ தளர்வுகள் வழங்கலாம். ஆனால், அவரை முழுமையாக விடுவிக்கும் அல்லது பிடிவாரண்டை ரத்து செய்யும் வாய்ப்பு மிகக் குறைவு என்கிறது சட்ட வல்லுநர் குழு.

பெரிய அளவிலான நிதி மோசடி – ரூ.13,400 கோடி மதிப்பிலான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடி என்பது இந்தியாவின் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாகும். இதன் காரணமாக, அவருக்கு எந்தவிதமான தளர்வும் அளிக்க இந்திய அரசு தயாராக இருக்காது.

அவரை நாடு திரும்ப அழைக்கும் முயற்சிகள் – இந்திய அரசு, ஆண்டிகுவா மற்றும் பார்புடா அரசு, டொமினிக்கா அரசு ஆகியவற்றின் உடன்பாட்டில், அவரை நாடு திரும்ப அழைக்க தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக வெளியிட்ட சர்வதேச பிடிவாரண்ட் – அவருக்கு எதிராக இன்டர் போலுடன் (Interpol) இணைந்து இந்திய அரசு ஒரு "Red Corner Notice" (சிவப்பு எச்சரிக்கை) ஏற்கனவே பிறப்பித்துள்ளது. இது அவருக்கு எங்கு சென்றாலும் சர்வதேச போலீசாரால் கைது செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

நீதிமன்றத்தின் முந்தைய நிலைப்பாடு – இந்திய நீதிமன்றங்கள் இதற்கு முன்பு பல்வேறு மோசடி வழக்குகளில், நோயால் பாதிக்கப்பட்டாலும் குற்றவாளிகளை விட்டுவைக்காமல், விசாரணை தொடர்பாக அவர்களை நாடு திரும்ப அழைத்துள்ளன.

இப்படி பல காரணங்கள் இருப்பதால் மெஹுல் சோக்ஸியின் பிடி வாரண்ட் ரத்து செய்யப்படுவது என்பது சந்தேகம் தான். இதற்கான முடிவுகள் வரும் வரை காத்திருந்து பார்ப்போம். 

Tags:Nirav ModiGitanjali GemsMehul ChoksiMumbai High CourtPunjab National BankPNB