தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Friday, Jul 4, 2025 | India

Advertisement

Home / இந்தியா

PVR விளம்பர விவகாரம் : அபராதம் செலுத்த இடைக்கால தடை!

PVR சினிமாஸில் விளம்பரங்கள் ஒளிபரப்புவதால் ஏற்பட்ட திரையிடல் தாமதத்திற்காக பார்வையாளருக்கு இழப்பீடு வழங்கும் உத்தரவிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

News Image

Author: Santhosh Raj KM

Published: March 11, 2025

Advertisement

பிப்ரவரி 15, 2025 PVR சினிமாஸில் திரையிடலின் போது விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட தாமதத்திற்கு பார்வையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என PVR சினிமாஸுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு மார்ச் 27-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம்.

கடந்த 2023 டிசம்பர் 26 அன்று அபிஷேக் என்பவர், புக் மை ஷோ ( Book My show) செயலி மூலம் பிவிஆர் (PVR) சினிமாஸில் திரைப்படம் காண சென்றார் ஆனால், குறிப்பிட்ட நேரத்தை விட 25 நிமிடங்கள் தாமதித்து படம் மாலை 4.30 மனிக்கு தான். சுமார் 25 நிமிடங்கள் விளம்பரங்கள் மட்டுமே திரையிடப்பட்டது. இதனால்  பிவிஆர் (PVR) மீதும் புக் மை ஷோ ( Book My Show) மீதும் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் அபிஷேக் வழக்கு தொடர்ந்தார். 

Advertisement

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் 15.02.2025 அன்று நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் நேரத்தை வீணடித்த குற்றத்திற்காக ரூ.50 ஆயிரம் தொகையை மனுதாரர் அபிஷேக்குக்கு வழங்க வேண்டும். அதேபோல வழக்கு தொகைக்காக ரூ.5 ஆயிரம் மற்றும் மன வேதனைக்கு நஷ்டஈடாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.65 ஆயிரம் வழங்கு வேண்டும். தவிர, ரூ.1 லட்சம் தொகையை நீதிமன்றத்திற்கு அபராதமாக வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்த உத்தர்வை எதிர்த்து பெங்களூரு பி.வி.ஆர் சினிமாஸ் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், PVR தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி எம்.நாகபிரசன்னா அமர்வு, இந்த வழக்கு விசாரணையை வரும் மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரையில் PVR சினிமாஸ் அபராதம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:Karnataka High courtPVR CinemasBengaluruBengaluru Consumer Court

No comments yet.

Leave a Comment