- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Rajiv Yuva Vikasam Scheme: 5 லட்சம் இளைஞர்களுக்கு ரூ.3 லட்சம்... இந்த திட்டத்தை பற்றி தெரிஞ்சிக்கோங்க.!
ராஜீவ் யுவ விகாசம் திட்டதிற்கு தகுதியானவர்கள் tgobmms.cgg.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம்.

Author: Gowtham
Published: March 17, 2025
ராஜீவ் யுவ விகாசம் திட்டம் என்பது தெலங்கானா மாநில அரசால் 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான திட்டமாகும். இது தெலங்கானாவில் உள்ள வேலையில்லாத இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்திற்காக தெலங்கானா மாநில அரசு ரூ. 6,000 கோடியை ஒதுக்கியுள்ளது.மாநிலம் முழுவதும் 5 லட்சம் இளைஞர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இன்று (மார்ச் 17) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
யாருக்கு பலன்
இத்திட்டம் மாநிலத்தில் உள்ள பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) மற்றும் சிறுபான்மையினர் (Minority) ஆகிய சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு குறிப்பாக உதவுவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எங்கு விண்ணப்பிக்க வேண்டும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த திட்டத்திற்கு தகுதியுள்ளவர்கள் சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சம் வரை நிதி உதவி பெற முடியும். இதற்கு விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ போர்ட்டலில் (tgobmms.cgg.gov.in) விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது,
விண்ணப்பங்கள் ஏப்ரல் 6 முதல் மே 31 வரை பரிசீலிக்கப்படும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஜூன் 2, 2025 (தெலங்கானா உருவாக்க நாள்) அன்று நிதி உதவி வழங்கப்படும். 60%-80% தள்ளுபடியுடன் கிடைக்கும் இந்தக் கடன்கள் சுமார் 5 லட்சம் பேருக்கு ரூ.6,000 கோடி செலவில் வழங்கப்படுகிறது.
கடன் வகைகள் மற்றும் மானிய அமைப்பு
1. 80% மானியத்துடன் ரூ. 1 லட்சம் வரையிலான கடன்கள்; மீதமுள்ள 20% பயனாளியால் ஏற்கப்படும் அல்லது வங்கி இணைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
2.70% மானியத்துடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான கடன்கள்.
3.60% மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடன்கள்.
திட்டத்தின் நோக்கம்
இளைஞர்களுக்கு சொந்த தொழிலைத் தொடங்குவதற்கான நிதி உதவி வழங்குவதும்,தெலங்கானாவில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். மேலும், இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் பயன்களைப் பெற, விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்
தகுதி
தெலங்கானாவில் நிரந்தர வசிப்பவராக இருக்க வேண்டும், இத்திட்டத்தின் பயன்களைப் பெற இளைஞராக இருக்க வேண்டும். குறிப்பாக தற்போது வேலையில்லாதவராக இருக்க வேண்டும். மேலும், பட்டியல் சாதி (SC), பட்டியல் பழங்குடி (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்பு (BC) அல்லது சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- ரேஷன் அட்டை
- தெலங்கானாவின் குடியிருப்பு சான்று
- கல்வி தொடர்பான ஆவணங்கள்
- மொபைல் எண்
- வங்கி கணக்கு விவரங்கள்
- சாதி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள இளைஞர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான tgobmms.cgg.gov.in அல்லது tgobmmsnew.cgg.gov.in சென்று விண்ணப்பிக்க வேண்டும்.