- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஏலத்தில் எடுக்கப்படாத ஷார்துல்...விமர்சனங்களை சந்தித்த பூரன்! தரமாக கொடுத்த பதிலடி?
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்எடுத்தவர் என்ற சாதனையை நிக்கோலஸ் பூரன் படைத்தது அசத்தியுள்ளார்.

Author: Bala Murugan K
Published: March 28, 2025
ஐபிஎல் 2025 தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பரபரப்பான போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றன. இதில், மார்ச் 27, 2025 அன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) இடையேயான போட்டியில், நிக்கோலஸ் பூரனும் ஷார்துல் தாக்கூரும் சிறப்பாக விளையாடி விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
நிக்கோலஸ் பூரன்: 21 கோடி மதிப்பை நியாயப்படுத்திய அதிரடி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்பு நிக்கோலஸ் பூரனை 21 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தபோது, பலரும் அதை சந்தேகத்துடன் பார்த்தனர். இவ்வளவு கோடிக்கு அவர் எப்படி சரியாக இருப்பார். அவருடைய விலை அதிகமாக இறுகிறது என விமர்சனங்கள் எழுந்தது.
இந்தப் போட்டியில் பூரன் தனது மதிப்பு மிகவும் பொருத்தமானது என்பதை நிரூபித்தார். SRH முதலில் பேட் செய்து 190/9 என்ற ஸ்கோரை எட்டியது. 191 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய LSG அணியில், பூரன் மிட்செல் மார்ஷுடன் (52 ரன்கள், 31 பந்துகள்) இணைந்து, வெறும் 26 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இதில் 6 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். அது மட்டுமின்றி நடப்பு சீசனில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்து ஆரஞ்சு கேப்பையும் பெற்றுக்கொண்டார்.
ஷார்துல் தாக்கூர்: ஒரு கட்டத்தில் ஷார்துல் தாக்கூர் என்றாலே மிகவும் பிரபலமாக இருந்தார். ஆனால், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எந்த அணியிடமிருந்தும் அழைப்பு வராத காரணத்தால் மிகவும் சோகத்தில் இருந்தார். இந்த ஏமாற்றத்தில் இந்தியாவை விட்டு வெளியேறி, இங்கிலாந்தில் எசெக்ஸ் அணிக்காக கவுண்டி கிரிக்கெட் ஆட முடிவெடுத்திருந்தார். அப்போது தான், LSG அணியில் நெட் பவுலராக பணியாற்றி வந்த அவருக்கு, மொஹ்சின் கான் காயமடைந்து விலகியதால் பெரிய வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும் ஏலத்தில் எடுக்காத ஒரு வீரருக்கு எதுக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள் என்ன செய்ய போகிறார் இவர் என்பது போல கேள்விகள் எழுந்தது. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக 2 ஓவர்களில் 2/19 என்று தொடங்கிய அவர், SRH-க்கு எதிராக 4 ஓவர்களில் 4/34 என்று அசத்தினார். மொத்தமாக இந்த சீசனில் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர் இந்த ஆண்டு அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்து அதற்கான தொப்பியையும் பெற்றுக்கொண்டு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.