- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்தணுமா? இதை செய்யுங்கள்.., சுனில் கவாஸ்கர் ஐடியா!
இரு நாட்டின் எல்லைகளில் அமைதியை நிலைநாட்டுவதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை மீண்டும் தொடங்க முடியும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Author: Kanal Tamil Desk
Published: February 28, 2025
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடர் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தன்னுடைய கருத்தை முன் வைத்துள்ளார். அதாவது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடரை எவ்வாறு நடத்த முடியும் என்கிற வழியை சுனில் கவாஸ்கர் எடுத்துரைத்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு கிரிக்கெட் தொடர் எதுவும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் அணி கடைசியாக 2012-ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதேபோல, இந்தியா கடைசியாக 2008 ஆசிய கோப்பையின் போது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அதேநேரம், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுக்கு சென்று எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. தற்போது, நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபிக்காக கூட, இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்த்து கொண்டது.
அதற்கு பதிலாக, துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியாவின் போட்டிகளை நடத்துவதற்காக BCCI மற்றும் PCB இடையே ICC ஒரு ஒப்பந்தத்தை உறுதி செய்தது. அதன் அடிப்படையில் இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் கிரிக்கெட் உறவுகளை மீண்டும் தொடங்க முடியும் என்று இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் நிகழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் சேனனில் பேசிய சுனில் கவாஸ்கர், இந்திய எல்லையில் பிரச்சனை நிலவி வருவதன் காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் எதிராக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில்லை என்று கூறினார்.
இதனால், 'இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரசாங்கங்கள் ஒன்றாக அமர்ந்து இருநாட்டு எல்லை விவகாரங்கள் குறித்த பேசி முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே கிரிக்கெட் விளையாட முடியும், இப்போது நாம் மற்ற விஷயங்களைப் பற்றி பேசலாம்' என்று கூறினார்.