தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / கிரிக்கெட்

பழைய பகையை தீர்த்த சிராஜ்...சால்ட் செஞ்ச முன்னாள் சம்பவம்! இப்படி ஒரு கதையா?

2023 ஐபிஎல் போட்டியில் நடந்த சம்பவத்திற்கு சிராஜ் 2025-ஆம் ஆண்டு சால்ட்டை விக்கெட் எடுத்து பழி தீர்த்துள்ளார்.

News Image

Author: Bala Murugan K

Published: April 3, 2025

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் குஜராத் அணியும் மோதிய நிலையில், குஜராத் அணி அசத்தல் வெற்றிபெற்று சொந்த மைதானத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணமே பெங்களூர் அணிக்காக முன்னதாக விளையாடிய சிராஜ் தான் காரணம். ஏனென்றால், போட்டியில் அசத்தலாக பந்துவீசி மொத்தம் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் சால்ட் விக்கெட்டை அவர் தூக்கியது தான் பெரிய விஷயமாகவும் அமைந்தது. போட்டியின் 5-வது ஓவரில், பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் , குஜராத் டைட்டன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை (Mohammed Siraj) எதிர்கொண்டார். அந்த ஓவரின் 3-வது பந்தை சால்ட் சுழற்றி அடித்ததில் பந்து 105 கீ.மீ.சிக்சருக்கு தெறித்தது.

அதற்கு அடுத்த பந்திலே சிராஜ் இந்த வச்சிக்கோ என்பது போல போல்ட் எடுத்து கொடுத்தார். இந்த விக்கெட் மூலம் முகமது சிராஜ் பழைய பகையை தீர்த்து, பில் சால்ட்டை எப்படி எதிர்கொண்டார் என்பது பற்றிய கதை ஒன்றும் இருக்கிறது. இருவருக்கும் ஆகவே ஆகாது சண்டையும் போட்டிருக்கிறார்கள்.

இப்போது இல்லை IPL 2023-ல் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இது அடிப்படையாகக் கொண்டது. 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்தது. அப்போது பெங்களூர் அணிக்காக சிராஜ் விளையாடினார். டெல்லி அணிக்காக சால்ட் விளையாடினார்.

அந்த போட்டியில் சிராஜ் மற்றும் சால்ட்டுக்கு இடையே ஒரு சூடான மோதலை உருவாக்கியது, ஆனால் பின்னர் அவர்கள் சமாதானமாகி, விளையாட்டு தன்மையை வெளிப்படுத்தினர். இதோ அந்தக் கதை:

சால்ட் vs சிராஜ் - பழைய பகை தொடங்கிய இடம்

மே 6, 2023 அன்று, அருண் ஜெய்ட்லி மைதானத்தில் DC மற்றும் RCB அணிகள் மோதின. RCB முதலில் பேட்டிங் செய்து 181/4 ரன்கள் எடுத்தது, விராட் கோலி (55) மற்றும் மகிபால் லோம்ரோர் (54*) ஆகியோரின் பங்களிப்பால். பதிலுக்கு, DC அணி 182 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தியது. இங்குதான் சால்ட் மற்றும் சிராஜ் மோதல் தொடங்கியது.

DC இன்னிங்ஸின் 5வது ஓவரை சிராஜ் வீசினார். அப்போது பில் சால்ட், சிராஜ் பந்தை டென்னிஸ் பந்து போல  கடுமையாகத் தாக்கினார். முதல் பந்தில் ஒரு சிக்ஸர், அடுத்த பந்திலும் சிக்ஸர், மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரி - மொத்தம் 16 ரன்கள் ஒரே மூன்று பந்துகளில் எடுத்தார். இதனால் என்னுடைய பந்தையா அடிக்கிறாய்? இரு உனக்கு இருக்கு என்பது போல கோபமடைந்தார். நான்காவது பந்தாக ஒரு பவுன்சரை வீசினார், ஆனால் அது வைடு என அறிவிக்கப்பட்டது.

இதைப் பார்த்த சால்ட், சிராஜைப் பார்த்து சிரித்து ஏதோ கிண்டலாகச் சொன்னார். இது சிராஜை இன்னுமே ஆத்திரமூட்டியது. சிராஜ் உடனடியாக சால்ட்டை நோக்கி நடந்து சென்று, விரலை சுட்டிக்காட்டி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அப்போது DC கேப்டன் டேவிட் வார்னர் சமாதானம் செய்ய முயன்றார், ஆனால் சிராஜ் அவரையும் விட்டுவைக்கவில்லை. கடைசியாக, நடுவர்கள் தலையிட்டு சண்டைபோடாதீங்க பா என அமைதிப்படுத்தினர்.

சிராஜ், சால்ட்டை "அமைதியாக இரு" என்பது போல சைகை செய்தார். ஆனால், சால்ட் அந்த ஓவரை வென்றவர் போல உணர்ந்தார், நான் தான் உன்னுடைய பந்துகளை பறக்கவிட்டுவிட்டேனே இனிமேல் நீ என்ன செய்வாய் என்பது போல பார்த்தார். அந்த போட்டியில் சிராஜ் வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார், 28 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எடுக்கவில்லை.

மறுபுறம், சால்ட் 45 பந்துகளில் 87 ரன்கள் (8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) விளாசி, DC-யை 16.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அவரது அதிரடி ஆட்டத்திற்கு "பிளேயர் ஆஃப் தி மேட்ச்" விருதும் கிடைத்தது. போட்டிக்குப் பின் பேசிய சால்ட், "சிராஜை எதிர்கொள்வது எங்கள் திட்டமாக இருந்தது. அவரை ஆதிக்கம் செய்தால், எங்கள் அணிக்கு அமைதியான தொடக்கம் கிடைக்கும்," என்று கூறினார். இது சிராஜுக்கு ஒரு பெரிய அவமானமாக அமைந்தது.

இதனை சிராஜ் மனதில் வைத்திருந்தாரா இல்லையா என்று தெரியவில்லை.  IPL 2025-ல் (ஏப்ரல் 2, 2025) RCB vs GT போட்டியில், சிராஜ் சால்ட்டை வீழ்த்தி பழி தீர்த்தார். சால்ட் முதல் பந்தில் 105 மீட்டர் சிக்ஸர் அடித்தாலும், அடுத்த பந்தில் சிராஜ் அவரது ஸ்டம்புகளை தகர்த்து பதிலடி கொடுத்தார். இது "பழைய பகையை தீர்த்த கதை" என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், அவர்கள் மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்தினாலும், போட்டி முடிந்த பிறகு சமாதானமானது அவர்களின் விளையாட்டு மனப்பான்மையை காட்டியது.
 

Tags:Mohammed Siraj vs Phil SaltMohammed SirajPhil SaltIPL 2025