- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கடும் சரிவைக் கண்ட பங்குச்சந்தை! அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
இன்று (ஜனவரி 21) தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 320.10 புள்ளிகள் குறைந்து 23,024.65 எனவும், மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 1,235.08 புள்ளிகள் குறைந்து 75,838.36 எனவும் நிறைவு பெற்றுள்ளன.

Author: Kanal Tamil Desk
Published: January 21, 2025
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்1,235.08 புள்ளிகள் சரிந்து 75,642 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்து பங்குகள் விலை சரிந்து ஒரே நாளில் ரூ7.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஜனவரி 21 நிலவரப்படி தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி குறியீடு எண் 320.10 (-1.37%) புள்ளிகள் அளவுக்கு குறைந்து 23,024.65 என்கிற அளவில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இன்று முழுவதும் சரிவை கண்ட நிஃப்டி குறைந்தபட்சம் 22,976.85 என்ற அளவிலும் அதிகபட்சமாக 23,426.30 என்ற அளவு வரையிலும் சென்றது.
அதேபோல, மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் நிலவரத்தை பொறுத்தவரையில், இன்று 75,641.87 புள்ளிகள் முதல் 77,337.36 புள்ளிகள் வரை வர்த்தகமானது. இறுதியில், 1,235.08 புள்ளிகள் சரிந்து (-1.60%) 75,838.36 என்ற அளவில் இன்றைய மும்பை பங்குச்சந்தை முடிவடைந்தது.
மிட்கேப் குறியீடு நிஃப்டி 50ஐ விட பின்தங்கியது, நிஃப்டி மிட்கேப் 50 2.19% குறைந்துள்ளது. இதேபோல், நிஃப்டி ஸ்மால் கேப் 100 சுட்டிக்காட்டியபடி, ஸ்மால்-கேப் பங்குகள் நிஃப்டி 50 ஐக் குறைவாகச் செய்தது.
எந்தெந்த நிறுவனங்கள் இன்று உயர்வை கண்டது, எந்தெந்த நிறுவனங்கள் சரிவை கண்டது என்பது பற்றியும் கீழே காணலாம்…
சென்செக்ஸ் :
அதிக லாபம் ஈட்டுய நிறுவனங்களின் பட்டியலில் அல்ட்ராடெக் சிமெண்ட் (0.76%), HCL டெக்னாலஜிஸ் (0.49%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
அதிக நஷ்டம் அடைந்த நிறுவனங்கள் பட்டியலில் என்டிபிசி (3.51% சரிவு), ஐசிஐசிஐ வங்கி (2.98% சரிவு), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (2.57% சரிவு), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (2.46% சரிவு), மஹிந்திரா & மஹிந்திரா (2.17% சரிவு) ஆகியவை உள்ளன.
நிஃப்டி :
அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களின் பட்டியலில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் (2.04%), டாடா நுகர்வோர் (1.23%), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (1.05%), JSW ஸ்டீல் (0.83%), ஸ்ரீராம் ஃபைனான்ஸ் (0.70%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
அதிக நஷ்டம் அடைந்த நிறுவனங்களின் பட்டியலில் ட்ரெண்ட் (5.80), அதானி போர்ட்ஸ் & சிறப்புப் பொருளாதார மண்டலம் (3.70%), என்டிபிசி (3.50%), ஐசிஐசிஐ வங்கி (2.98% ), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (2.59%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
இன்று சரிவுகான காரணம்?
சரிவுக்கான அமெரிக்க அரசியல் மாற்றம்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், அவரது அரசின் நடவடிக்கைகள் இந்திய நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றம்: அமெரிக்க நிதிக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் எதிர்பார்ப்பில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பனை செய்து வெளியேறியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.