நீதிமன்ற உத்தரவை மீறி வசூலிக்கும் சுங்க்சாவடி கட்டனம்
உயர்நீதிமன்ற இடைக்கால தடையை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வசூலிக்கும் சுங்க கட்டணம்.

Author: Santhosh Raj KM
Published: June 4, 2025
உயர் நீதிமன்றம் நேற்று( ஜூன் -3 ) - மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்த நிலையில் சுங்கச்சாவடியில் இன்று கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்
Advertisement
கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை -தூத்துக்குடி இடையிலான தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. மேலும் இந்த நெடுஞ்சாலையில் இரண்டு புறமும் மரங்கள் மற்றும் நடுவில் சென்டர் மீடியன் அமைப்பு அதாவது சாலையின் நடுவில் செடிகள் நட்டு பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை எந்தவித அடிப்படைவசதி எதுவும் செய்யவில்லை
இதனையடுத்து கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை ரத்து செய்தது. மேலும் மதுரை தூத்துக்குடி சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் பெற்றிருந்த நிறுவனம், நெடுஞ்சாலை பராமரிப்புக்காக ரூ.563.83 கோடி செலவிட வேண்டியிருந்தது. ஆனால் அந்த அளவில் செலவிடப்படவில்லை.
Advertisement
அதே நேரத்தில் ஒப்பந்த தொகையை விட கூடுதலாக சுங்கச்சாவடி கட்டணம் மூலம் வசூல் செய்துள்ளது.
தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சாலை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மாதம் சுங்கக் கட்டணமாக ரூ.11 கோடி வசூல் செய்யப்படுகிறது. இதில் ரூ.30 லட்சம் மட்டுமே பராமரிப்பு பணிக்கு செலவிடப்படுகிறது. இதனால் போதுமான சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தியும் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகளை வாகன ஓட்டிகள் பெறவில்லை.
எனவே மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள், நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் வாகன ஒட்டிகளிடம் 30 சதவீத சுங்க கட்டணம் மட்டும் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு நேற்று (ஜூன் 3) விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைப்பது, மரம் வளர்ப்பது உள்ளிட்ட வசதிகளை முறையாகச் செய்யும் வரை சுங்கக் கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
Advertisement
ஆனால் இன்று ( ஜூன் 4) நீதிமன்றம் உத்தரவை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்பட்டது இடைக்கால தடையை மீறி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் மற்றும் வழக்கு தொடுத்த நபர்கள் முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர்.
No comments yet.
