மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.2500... பெண்களுக்கு சூப்பர் திட்டம்.! டெல்லியில் இன்று முதல் அமல்!
சர்வதேச மகளிர் தினமான இன்று, முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற டெல்லி அமைச்சரவைக் கூட்டத்தில், ஆண்டுக்கு ரூ.5,100 கோடி பட்ஜெட் ஒதுக்கி இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Author: Gowtham
Published: March 8, 2025
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில், அம்மாநில முதல்வராக ரேகா குப்தா அன்மையில் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
Advertisement
அதன்படி, தேர்தலின்போது பாஜக தரப்பில் தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலில் வென்று ஆட்சியமைத்துள்ள பாஜக, மகிளா சம்ரிதி திட்டம் என்ற பெயரில் அத்திட்டத்தை மகளிர் தினமான இன்று தொடங்கியுள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு இத்திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடு வகையில், முதல்வர் ரேகா குப்தா தலைமையில் டெல்லி அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அரசுத் திட்டத்தால் டெல்லியைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் பயனடைவார்கள் எனஅம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் ரேகா குப்தா, "ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கும் 21-60 வயதுடைய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசாங்கம் ரூ.5,100 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிட, முதல்வர் ரேகா குப்தா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள் ஆஷிஷ் சூட், பர்வேஷ் வர்மா மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோரும் இந்தக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று முதல்வர் குப்தா கூறிய அவர், இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக ஒரு பிரத்தியேக இணையதளம் விரைவில் தொடங்கப்படும்" என்றும் கூறினார்.
Advertisement
இந்தத் திட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2500 வழங்கப்படும். இந்தத் தொகை அரசாங்கத்தால் நேரடியாகப் பெண்களின் வங்கி கணக்குகளுக்கு (DBT) மூலம் பணம் அனுப்பப்படும். இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற, டெல்லி அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி உடைய பெண்கள் மட்டுமே திட்டத்தின் கீழ் பலன் பெற முடியும்.
குறிப்பாக, இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான பதிவு தேதி குறித்து தற்போது எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க பெண்களுக்கு சில ஆவணங்கள் தேவைப்படும்.
தகுதி
இந்தத் திட்டத்தில் பயன்பெறும் பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள். அதுவும் 21 முதல் 59 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மட்டுமே, 60 வயதை முடித்த பிறகு பெண்களுக்கு கிடையாது. 60 வயது அல்லது அதற் மேற்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
மேலும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். அரசு வேலை செய்யாதவர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு கிடையாது. இது தவிர, அரசாங்கத்தால் நடத்தப்படும் எந்தவொரு நிதித் திட்டத்தின் பயனையும் பெறாத பெண்கள். இதனுடன், அந்தப் பெண் டெல்லியைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருப்பது அவசியம்.
தேவைப்படும் ஆவணங்கள்
ஆதார் அட்டை, டெல்லி வாக்காளர் அட்டை, வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை அடங்கும்.
No comments yet.
