Advertisement
பதவியை பிடிங்க அக்சர் படேல்! கேப்டன் பதவியை விட்டு கொடுத்த கே.எல்.ராகுல்!
டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Author: Bala Murugan K
Published: March 14, 2025
Advertisement
ஐபிஎல் 2025 சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி கேப்டன் யார் என்கிற கேள்வி தான் பெரிய விடை தெரியாத கேள்வியாக இருந்தது. அந்த கேள்விக்கும் பதில் கிடைத்துவிட்டது. அதன்படி, இந்த ஆண்டு டெல்லி அணியை அக்சர் படேல் தான் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல் இல்லையா?
Advertisement
டெல்லி அணி லக்னோவில் இருந்து கே.எல் ராகுலை ஏலத்தில் எடுத்தபோதே அவர் தான் கேப்டனாக இருப்பார் என கூறப்பட்டது. அணி நிர்வாகமும் அதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு தான் அவரை கேப்டனாக அறிவிக்கலாம் என நினைத்தனர். ஆனால், கடைசி நேரத்தில் தனக்கு கேப்டன் பதவி வேணாம் என கே.எல்.ராகுல் மறுத்துவிட்டார்.
காரணம் என்ன?
கேப்டன் பதவி வேண்டாம் என கே.எல்.ராகுல் மறுத்த காரணமே இதற்கான முக்கிய காரணம், அவரது மனைவி அதியா ஷெட்டி (Athiya Shetty) நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதுதான்.அவரது குடும்பத்தில் முதன்முறையாக குழந்தை பிறக்க உள்ளதால், அந்த நேரத்தில் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறார். இதனால், ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியாது என்று முன்கூட்டியே முடிவு செய்திருந்தார். எனவே, இந்த முறை கேப்டன் இல்லாமல் அடுத்த சீசன் கேப்டனாக விளையாட முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அக்சர் படேலை ஏன் தேர்வு செய்தார்கள்?
கே.எல்.ராகுல் மறுப்பு தெரிவித்த நிலையில், அடுத்ததாக கடந்த சில ஆண்டுகளாக டெல்லி அணியில் தொடர்ந்து விளையாடி வரும் அக்சர் படேலை தேர்வு செய்து இந்த பொறுப்பை வழங்கியுள்ளனர். பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக செய்யக்ப்பட்டு வரும் அவர் இந்திய அணிக்காகவும், இந்திய டி20 லீக்கிலும் முக்கியமான அனுபவம் பெற்றுள்ளார்.எனவே, இவரை போல ஒரு வீரர் கேப்டனாக இருந்தால் சரியாக தான் இருக்கும் என நிர்வாகம் திட்டமிட்டு இந்த பதவியை வழங்கியிருக்கிறது. அக்சர் படேல் தனது புதிய கேப்டன் பொறுப்பில் எப்படி செயல்படப் போகிறார் என்பதும், டெல்லி அணிக்கு இது சாதகமாக அமையுமா என்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
வாழ்த்து தெரிவித்த கே.எல்.ராகுல்
கே.எல். ராகுல், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, அக்சர் படேல் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்துகொண்டு இருக்கிறது. கே.எல். ராகுல் தனது சக வீரர் அக்சர் படேலுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரது வாழ்த்து செய்தியில், "அக்சர், நீங்கள் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் தலைமையில் அணி சிறந்த முன்னேற்றத்தை அடையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உங்கள் புதிய பொறுப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
No comments yet.