தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Tuesday, Dec 2, 2025 | India
Home / தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு : 2 நீதிபதிகளும் ‘திடீர்’ விலகல்!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 2 நீதிபதிகளும் விலகியுள்ளனர்.

News Image

Author: Santhosh Raj KM

Published: March 25, 2025

தமிழகத்தில் 'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என, 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் அமலாக்கத்துறை, இவ்வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

Advertisement

இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, மார்ச் 25-ம் தேதி (இன்று) வரை டாஸ்மாக் வழக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டது.

அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்தனர்

Advertisement

தற்போது இந்த வழக்கு‌ வேறு அமர்வுக்கு மாற்றம் செய்து விசாரிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:TASMACEnforcement DirectorateMadras High court

No comments yet.

Leave a Comment