தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / தமிழ்நாடு

தென்காசி KVB வங்கிக்கு மேலாளருக்கு ரூ.25,000 அபராதம்! உயர் நீதிமன்றம் உத்தரவு!

கடனை செலுத்தியபின்னும் அடமான ஆவணங்களை தரவில்லை என தொடரப்பட்ட வழக்கில் கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News Image

Author: Santhosh Raj KM

Published: February 18, 2025

தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த மாரித்துறை  என்பவர் கரூர் வைசியா வங்கியில் கடன் பெற்றார் அதற்கான வட்டி மற்றும் அசல் தொகையை முறையாக செலுத்தி வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றின் போது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் முறையாக செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது அதன் பின் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செலுத்த வேண்டிய அனைத்து தொகையும் செலுத்திய பின்னரும் அவரது  ஆவணங்களை வங்கி திரும்ப கொடுக்கவில்லை.இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் மனுதாரர்  நான் தொழில் செய்வதற்காக கரூர் வைசியா வங்கியில் 39 லட்சத்து 74 ஆயிரத்து 523 ரூபாயை கடனாக பெற்றேன் அதற்கான வட்டி மற்றும் அசல் தொகையை முறையாக செலுத்தி வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றின் போது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் முறையாக செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வங்கியில் அடமானமாக கொடுத்த சொத்தை ஜப்தி செய்ய போவதாக அறிவிப்பு வெளியாகியது. இதனால் நீதிமன்றத்தை நாடிய போது 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதிக்குள் ரூ.7லட்சத்தையும், பின்பு மீத தொகையை 4 தவணைகளாக செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதிக்குள் மொத்த கடன் தொகையும் செலுத்தி விட்டேன். பின்னர் வங்கியை அணுகி சொத்து அடமான ஆவணங்களை தருமாறு கூறிய போது, மேலும் கூடுதலாக பணத்தை செலுத்தினால்தான் ஆவணங்களை வழங்க இயலும் என  வங்கி ஊழியர் தெரிவித்தாக சொல்லியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில், 

நீதிமன்றம் உத்தரவிட்டபடி அனைத்து தொகையையும் செலுத்திய பின்னரும், வங்கியில் இருந்து கூடுதலாக ரூ.5 லட்சம்  செலுத்தினால்தான் ஆவணங்களை வழங்க முடியும் என தெரிவித்துவிட்டனர் என குறிப்பிட்டு உத்தரவு நகலை வழங்கினார். 

அதனை பார்த்த நீதிபதிகள், "கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தனர்" பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமார் நேரில் ஆஜராகினார். நீதிபதி ஆவணங்களை எப்போது வழங்க இயலும் என கேட்டார். அதற்கு, வங்கியின் தலைமை மேலாளர் தரப்பில் திங்கட்கிழமை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

நீதிபதியின் தீர்ப்பு 

ஏழை மக்களைத் துன்புறுத்தக் கூடாது. அகந்தையுடன் நடந்து கொண்ட கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை ரூ 25,000/- மற்றும்  மனுதாரரிடம் இருந்து அடமானமாக பெற்ற அனைத்து ஆவணங்களையும் வங்கி தலைமை மேலாளர் பிப்.17-ல் காலை 11 மணிக்கு மனுதாரரின் வீட்டிற்கே நேரில் சென்று வழங்க வேண்டும். ஆவணங்களுடன் கடன் நிலுவையில் இல்லை என்பதற்கான தடையில்லா சான்றும் வழங்க வேண்டும் என உத்திரவு பிறப்பித்தார்.

Tags:TenkasiMadurai High courtKVBKarur Vysya Bank