ஆன்லைன் விளையாட்டுக்கு கட்டுப்பாடுகள்? உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு!
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Author: Santhosh Raj KM
Published: April 29, 2025
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தடைவிதிக்க கட்டாயமாக்கியும், நேரக் கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட முடியாத வகையில் நேரக்கட்டுப்பாடு ஆன்லைன் விளையாட்டுகளை 18 வயதுக்கு குறைவானவர்கள் விளையாட தடை விதித்தும், தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாடும்போது ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் எச்சரிக்கை குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும் என்றும், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்து மட்டுமே விளையாட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதித்தும் தமிழக அரசு புதிதாக விதிகளை வகுத்து பிப்ரவரி 14 அன்று அரசிதழில் வெளியிட்டது.
தமிழக அரசின் இந்த விதிகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி ப்ளே கேம்ஸ், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எகஸ்பர்ட் ப்ளேயர்ஸ் சங்கம் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எழுத்துப்பூர்வமான அனைத்துத்தரப்பு வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments yet.