புதிய அணியில் விஸ்வரூபம்... தொடரும் ஆட்ட நாயகன் சிராஜின் ஆதிக்கம்.!
நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிராஜ் நேற்றைய போட்டியிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

Author: Gowtham
Published: April 7, 2025
நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிராஜ் நேற்றைய போட்டியிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு உதவினார். ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.
Advertisement
பதிலுக்கு வெற்றியின் இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி, 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. குஜராத் அணிக்காக, கேப்டன் சுப்மன் கில் 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் மூலம் குஜராத் அணி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது. அதேநேரம் ஹைதராபாத் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியை சந்தித்தது. குஜராத்தின் வெற்றியின் நாயகன் முகமது சிராஜ் என்றே சொல்லலாம். தனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களமிறங்கிய முகமது சிராஜ் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நான்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
Advertisement
அவர், 4 ஓவர்களில் 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதான் ஐபிஎல் தொடரில் அவரது மிகச்சிறந்த பந்துவீச்சு. இதன் மூலம் ஐபிஎல்-லில் 100 விக்கெட்களை எடுத்தவர்கள் பட்டியலில் சிராஜும் இணைந்தார். இதுவரை 97 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பவர் பிளேயில் விக்கெட் எடுக்கும் திறன் கொண்ட அவர் வரும் போட்டிகளில் மேலும் பல சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்ட நாயகன்
Advertisement
அது மட்டும் இல்லாமல், நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார் முகமது சிராஜ். பெங்களூர் அணிக்காக 87 போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ், ஒரு முறை மட்டுமே 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். தற்போது குஜராத் அணியில் இணைந்த 4வது போட்டியிலேயே 4 விக்கெட்கள் வீழ்த்தி மாஸ் காட்டியுள்ளார்.
No comments yet.
