Advertisement
முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் கொடுத்த பங்குச்சந்தை! இன்றைய நிலவரம் இதோ!
இன்று (ஜனவரி 22) தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 130.70 (0.57%) புள்ளிகள் அளவுக்கு உயர்ந்து 23,155.35 எனவும், மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 566.63 புள்ளிகள் உயர்ந்து (0.75%) 76,404.99 என்ற அளவில் இன்றைய பங்குச்சந்தை நிறைவுபெற்றது.

Author: Kanal Tamil Desk
Published: January 22, 2025
Advertisement
நேற்று பங்குச்சந்தை கடுமையாக சரிந்தது முதலீட்டாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்த நிலையில், இன்று சற்று உயர்ந்து ஆறுதல் கொடுத்துள்ளது. குறிப்பாக, நேற்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,235.08 புள்ளிகள் சரிந்து 75,642 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது.
இன்றயை (ஜனவரி 22) நிலவரப்படி தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி குறியீடு எண் 130.70 (0.57%) புள்ளிகள் அளவுக்கு உயர்ந்து 23,155.35 என்கிற அளவில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இன்று முழுவதும் சரிவை கண்ட நிஃப்டி குறைந்தபட்சம் 22,981.30 என்ற அளவிலும் அதிகபட்சமாக 23,169.55 என்ற அளவு வரையிலும் சென்றது.
Advertisement
அதேபோல, மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் நிலவரத்தை பொறுத்தவரையில், இன்று 75,816.50 புள்ளிகள் முதல் 76,463.13 புள்ளிகள் வரை வர்த்தகமானது. இறுதியில், 566.63 புள்ளிகள் உயர்ந்து (0.75%) 76,404.99 என்ற அளவில் இன்றைய மும்பை பங்குச்சந்தை முடிவடைந்தது.
மேலும், நிஃப்டி மிட்கேப் 50 1.26% குறைந்து நாள் முடிவடைந்ததால், மிட்கேப் குறியீடு நிஃப்டி 50 ஐ விட பின்தங்கியது. இதேபோல், ஸ்மால்-கேப் பங்குகளின் செயல்திறன் குறைவாக இருந்தது,
எந்தெந்த நிறுவனங்கள் இன்று உயர்வை கண்டது, எந்தெந்த நிறுவனங்கள் சரிவை கண்டது என்பது பற்றியும் கீழே காணலாம்…
சென்செக்ஸ் :
அதிக லாபம் ஈட்டுய நிறுவனங்களின் பட்டியலில் விப்ரோ 3.60%, இன்ஃபோசிஸ் 3.16%, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2.97%, டெக் மஹிந்திரா 2.28%, மற்றும் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் 1.78% ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
அதிக நஷ்டம்: டாடா மோட்டார்ஸ் 2.24%, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 1.24%, ஆக்சிஸ் வங்கி 1.02%, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 0.76%, மற்றும் என்டிபிசி 0.56% .
நிஃப்டி :
அதிக லாபம் ஈட்டியவர்கள்: விப்ரோ 3.60%, இன்ஃபோசிஸ் 3.10%, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2.99%, டெக் மஹிந்திரா 2.65%, மற்றும் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் 2.06% ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் 3.10% , டாடா மோட்டார்ஸ் 2.37%, ட்ரெண்ட் 1.93%, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 1.59%, மற்றும் ஆக்சிஸ் வங்கி 1.12% என்ற கணக்கில் நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளது.
No comments yet.