- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
சக ஊழியர்கள் முன் பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த துயரம்! யூனியன் வங்கியில் நடந்தது என்ன?
அகமதாபாத் யூனியன் வங்கியில் இரண்டு பெண் அதிகாரிகள் துணை பிராந்தியத் தலைவரால் சக ஊழியர்கள் முன்பு பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: February 18, 2025
2025 பிப்ரவரி 12-ம் தேதி, குஜராத் அகாமதாபாத்தில் உள்ள யூனியன் வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் நடந்த சம்பவம் பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மகளிர் அதிகாரிகள் மத்தியில் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் பிராந்திய அலுவலகத்தின் துணைப் பிராந்தியத் தலைவர் (Deputy Regional Head) ராஜேஷ் குமார் மிஸ்ரா தலைமையில் அன்றைய நாள் காலை 9.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
அந்த ஆலோசனை கூட்டத்திற்கு இரண்டு பெண்கள் உட்பட 3 ரிலேஷன்ஷிப் மேனேஜர்களை (RMs) திடீரென அழைக்கப்பட்டுள்ளனர். முன்னறிவிப்புகள் இல்லாமல் அந்த கூட்டம் நடந்ததாக தெரிகிறது. இருப்பினும், இந்த ஆலோசனை கூட்டம் ஒரு பயிற்சி அல்லது மதிப்பீடு கூட்டமாக அவர்களிடம் கூறப்படவில்லை.
என்ன நடந்தது?
பெண்கள் மீது அவமதிப்பு: இந்த கூட்டத்திற்கு அழைத்த விதமும், நடந்த விதமும் அவமானமாக இருந்ததால் பெண்கள் மன அழுத்தத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர். எந்த காரணத்திற்காக அழைத்தார்கள் என்று சொல்லாமல் இருந்த காரணத்தால் அவர்கள் ஏற்கனவே ஏதாவது தவறு செய்துவிட்டோமா? எதற்காக அழைத்திருக்கிறார்? என்ற குழப்பத்தில் இருந்துள்ளனர்.
இந்த கூட்டம் வேலை சார்ந்த மதிப்பீட்டு (Performance Review) கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இந்த கூட்டத்தில் அவர்கள் தகுதியற்றவர்கள் போல அவமானப்படுத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் போது மிஸ்ரா முதலில் கூட்டத்தில் இருந்த மற்ற ஊழியர்களிடம் கைதட்டச் சொல்லினார். ஆனால், யாரும் கைதட்டவில்லை. அதன் பிறகு, அவமானப்படுத்தப்பட்ட பெண் அதிகாரிகளே தாங்களாகவே கைதட்ட வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தினார். இதனால், அவர்கள் மிகுந்த தர்ம சங்கடத்திற்கும், மனஉளைச்சலுக்கும் ஆளானார்கள் எனக் கூறப்படுகிறது.
ஆண் அதிகாரியையும் அவமதித்தனர்
ஏற்கனவே இரண்டு பெண் அதிகாரிகளை தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்த வெறுப்பான செயல்களில் ஒரு ஆண் ரிலேஷன்ஷிப் மேனேஜரையும் அனைவரது முன் நிறுத்தி மிஸ்ரா அவமதித்தார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை அனைத்தும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
மிஷ்ராவின் தொடர் நடவடிக்கைகள் :
இந்த நிகழ்வு முதன்முறை அல்ல, மிஷ்ரா இதற்கு முன்னதாகவும் பல முறை அதிகாரிகளை அவமதித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்யும் போது, பல முறை அதிகாரிகளை மன உளைச்சல் அடையச் செய்வதற்கான செயலில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
வங்கி விதிமுறை மீறல் :
மிஷ்ராவின் செயல்கள் யூனியன் வங்கியின் கோட் ஆஃப் எதிக்ஸ் (Code of Ethics) மற்றும் இந்திய தொழிலாளர் சட்டங்களையும் மீறும் செயல் என அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கியின் நிர்வாக கொள்கையானது பணியாளர்களிடையே அக்கறையும் மரியாதையும் இருப்பதைக் உறுதிப்படுத்த கோருகிறது. குறிப்பாக, பணியாளர்களை அவமானப்படுத்தும் மற்றும் அவர்களுடைய தன்மானத்தை மீறும் செயல்களை விதிமுறைகள் மீறும் செயலாக கருதப்படுகிறது.
இந்த நேரத்தில், இது யூனியன் வங்கியில் உள்ள அனைத்து பணியாளர்களிடையே அதிருப்தி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், பணியாளர்கள் இச்செயலுக்கு எதிரான நிர்வாக நடவடிக்கைகளை எதிர்நோக்குகின்றனர்.
சங்கத்தின் நடவடிக்கை :
யூனியன் வங்கி அதிகாரிகள் சங்கமானது, மிஷ்ராவின் செயல்களுக்கு எதிராக அதிகாரபூர்வமான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது. அவர்கள் கோட் ஆஃப் எதிக்ஸ் உள்ள பாரா 4.1 முறையை ஒப்புக்கொண்டு, இந்த செயல்களை வங்கியின் மேலாண்மை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.
அடுத்து என்ன? மேலும், வங்கியின் மேலாண்மை பிரிவில் இதுவரை இச்செயல் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது அழுத்தம் நிறைந்த பிரச்சினையாக உள்ளது, மேலும் அந்த வங்கியில் பணியாற்றும் பலரின் மனதிலும் இச்செயல் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகை அவமானங்களை, மன அழுத்தங்களை எதிர்த்து வங்கியின் மேலாண்மை மற்றும் அதிகாரிகள் செயல் முறைகளை அவதானித்து, உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சங்கம் வங்கியின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் உரிய படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.