தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Tuesday, May 6, 2025 | India
Home / தமிழ்நாடு

சாதி சான்றிதழ்களில் எழுத்துப்பிழை இருக்கக்கூடாது! உயர் நீதிமன்றம் உத்தரவு!

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News Image

Author: Santhosh Raj KM

Published: April 23, 2025

இசை வேளாளர் சாதிச் சான்றிதழ்களை இசை வெள்ளாளர் எனத் தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக சொன்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் 
சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இசை வேளாளர் சாதிச் சான்றிதழ்களை இசை வெள்ளாளர் எனத் தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் குகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுதாரர் தாக்கல் செய்த மனுவில்

தனது மகளுக்கு சாதி சான்றிதழ் கோரி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்த போது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் எனக் குறிப்பிட்டு சாதி சான்று வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமிழக அரசின் அரசாணையில் இசை வேளாளர் என்பதை ஆங்கிலத்தில் இசை வெள்ளாளர் என இருப்பதால் அதனடிப்படையில் குறிப்பிட்டு சாதிச் சான்றிதழ் வழங்குவதாக கூறினார்.

நிதிபதியின் கேள்வி  

இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என மனுதாரருக்குக் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் பாதிப்பில்லை என்றாலும், ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும், சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் பதிலளித்தார் .

இவ்வழக்கின் மூலம் நீதிபதி தெளிவுப்படுத்துவது

சாதி சான்றிதழ்களை வழங்கும் போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். எழுத்துப்பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும். சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது. 

Tags:Community CertificateTN GovtChennaiMadras High court

No comments yet.

Leave a Comment