- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
INDvAUS : 66 கோடியை தாண்டிய பார்வையாளர்கள்.. ஜியோ-ஹாட்ஸ்டாரால் பல கோடி லாபம் பார்த்த அம்பானி!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் ஹாட்ஸ்டாரில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 66.9 கோடியைத் தாண்டியது.

Author: Bala Murugan K
Published: March 5, 2025
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில். போட்டியின் முடிவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 66.9 கோடியைத் தாண்டியது. இதன் மூலம், அதனுடைய உரிமையாளர் அம்பானிக்கு எவ்வளவு கோடி லாபம் கிடைத்துள்ளது என்பது பற்றியும் இந்த பதிவில் விவரமாக பார்ப்போம்.
ஜியோ ஹாட்ஸ்டார்
முகேஷ் அம்பானி முன்னதாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தை கொண்டு வந்து முதலில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்கும் வசதியை கொண்டு வந்து அதன்மூலம் ஜியோ சினிமாவை பெரிய அளவுக்கு கொண்டு சென்றார். அதன்பிறகு. மாஸ்டர் பிளான் செய்து ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைத்து ஜியோஹாட்ஸ்டார் எனும் தளத்தை அறிமுகம் செய்து அதன்மூலம் சந்தா காட்டினால் மட்டுமே பயன்படுத்தமுடியும் என கொண்டு வந்தார்.
66 கோடிகளை தாண்டிய பார்வையாளர்கள்
இரண்டு ஓடிடி நிறுவனங்களும் ஒன்றாக இணைந்துள்ள காரணத்தால் நடைபெற்று வரும் முக்கிய கிரிக்கெட் தொடர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் மக்கள் அதில் கண்டுகளித்து வருகிறார்கள். இதுவரை, நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டிக்கு முன்னதாக 10 கோடி, 11 கோடி, 20 கோடி என பார்வையாளர்களை பெற்றுக்கொண்டு இருந்த நிலையில், நேற்று மொத்தமாக போட்டியின் முடிவில் 66.9 கோடியாக (669 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று நடைபெற்ற இந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை எதிர்த்து இந்தியா அணி 4 விக்கெட்டுகள் மற்றும் 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. போட்டியின் முடிவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 66.9 கோடியைத் தாண்டியது என பிரபல செய்தி நிறுவனமான MINT தகவலை வெளியிட்டுள்ளது.
வருமானம் எவ்வளவு?
ஒரே நாளில் மட்டும் இவ்வளவு பார்வையாளர்களை கடந்திருந்தது என்றால் எவ்வளவு கோடி ஜியோஹாட்ஸ்டாரின் உரிமையாளர் அம்பானிக்கு கிடைத்திருக்கும் என்பதை பற்றி நீங்கள் யோசிக்கும்போது எங்களுக்கு தெரிகிறது. அது பற்றிய தகவலும் AI தொழில் நுட்பம் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஹோட்ஸ்டாரில் 66.9 கோடி பேர் போட்டி பார்த்தது என்பது நாம் யூடியூப்பில் வீடியோக்களை பார்ப்பது போல கணக்கீடு செய்யப்பட்டு வருமானம் கிடைக்கும். அது எப்படி என்றால்,
- விளம்பர வருமானம் (Ads Revenue)
நாம் போட்டி பார்க்கும் போது, இடையில் சில விளம்பரங்கள் வரும். எனவே, போட்டியை பார்த்த அந்த 66.9 கோடி பேர் ஒவ்வொருவரும் சராசரியாக 10 விளம்பரங்கள் பார்த்திருக்கலாம். ஒரு விளம்பரத்தை 1000 பேர் பார்த்தால் ரூ. 200 வரை வருமானம் வரும் என்பது பொதுவாக இருக்க கூடிய ஒரு தகவலான விஷயம். எனவே, அதன் அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தோம் என்றால்,
66.9 கோடி × 10 = 669 கோடி விளம்பர பார்வைகள். எனவே, மக்கள் விளம்பரத்தை பார்த்ததன் மூலமே ரூ. 13,380 கோடி வருமானம் அம்பானிக்கு கிடைத்திருக்கலாம்.
2. சந்தா வருமானம் (Subscription Revenue)
சிலர் விளம்பரமில்லாத பிரீமியம் திட்டத்தை வாங்குவார்கள். புதிதாக போட்டி பார்க்க சுமார் 67 லட்சம் பேர் ரூ.500 செலுத்தியிருக்கலாம் (மாதம் ரூ299 - ஆண்டு ரூ.1,499). 67 லட்சம் பேர் × ரூ500 செலுத்தி வாங்கி இருந்தால் அதன் மூலம் = ரூ 3,345 கோடி வருமானம் கிடைத்திருக்கலாம்.
மற்ற வருவாய் மூலங்கள்
ஸ்பான்ஸர் பிரபல விளம்பரங்கள், ஸ்பெஷல் ப்ரீமியம் பாக்கேஜ்கள் போன்றவை. பற்றி இது சரியாக கணக்கிட்டு உறுதியான தகவல் இது தான் என்று நம்மளால் செய்ய முடியாது, ஆனால் சுமார் ரூ. 1000 கோடி வரை இருக்கலாம் என்று கணிக்கலாம்.
இதனை வைத்து கணக்கீட்டு பார்த்தோம் என்றால், மொத்தம்: ரூ. 17,725 கோடி நேற்று மட்டும் அம்பானிக்கு வருமானம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது உறுதிப்படுத்தப்படாத தகவலாகும். இந்த தகவல் AI தொழில்நுட்பம் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.