- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வக்ஃபு சட்டத்திருத்தம் : உச்சநீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் வழக்கு!
வக்பு சட்த்திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Author: M Manikandan
Published: April 15, 2025
வக்ஃபு சட்த்திருத்தத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் தற்போது தவெக தலைவர் விஜயும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையில் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் மசோதாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளன.
தவெக தலைவர் விஜய் :
பல்வேறு கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். முன்னதாக மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மசோதா நிறைவேற்றத்துக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய அளவில் போராட்டமும் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், "முஸ்லிம் சகோதரர்களோடு இணைந்து வக்பு உரிமமை சட்டப் போராட்டத்தில் தவெகவும் பங்கேற்கும்" என தெரிவித்திருந்தார். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தில் விஜய் தாக்கல் செய்த மனுவோடு சேர்த்து வக்பு சட்டதிருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.