- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
சின்னத்திரைக்கும் சென்சார் போர்டு வேண்டும்! உயர்நீதிமன்றத்தில் புதிய மனு!
டிவி தொடர்கள், விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியம் அமைக்க உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Author: Santhosh Raj KM
Published: March 4, 2025
மதுரை சேர்ந்த ரமேஷ் என்பவர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியம் அமைக்க உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார் அந்த வழக்கில் , மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
காரணம் என்ன?
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் எந்தவொரு தணிக்கைக்கும் உட்படவில்லை. முறை தவறிய உறவுகள், பிறருக்கு கெடுதல் செய்யும் செயல்கள், தனக்கு வேண்டியதை பெற எதையும் செய்யும் தவறான வாழ்க்கை வழிமுறைகள் இந்த தொடர்களில் கற்பிக்கப்படுகின்றன. அதோடு சில சமயங்களில் வரம்பை மீறிய ஆபாச காட்சிகள் மற்றும் ஆபாசமாக உடை அணிந்த காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன.
இது இளம் தலைமுறையினரை பாதிக்கும் புறச்சலலை ஏற்படுத்துகிறது, மேலும் குடும்ப உறவுகளுக்கும் சிக்கல் ஏற்படுத்தும் காரணமாகவும் ஆகிறது. அதனால், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் டிவியில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியம் உருவாக்கப்படும் வகையில் உத்தரவிட வேண்டும்.
அதேவேளை, அந்த வாரியத்தின் சான்றிதழை பெறாமல் தொடர்கள் மற்றும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படாமல் உறுதி செய்ய வேண்டும். இவற்றை மீறுபவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கவும் உத்தரவு செய்ய வேண்டும், என்று ரமேஷ் மனு அளித்து பொதுநல வழக்கில் கோரியிருந்தார்.
வழக்கில் கொடுத்த உத்தரவு
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேற்று ( மார்ச் 3 ம் தேதி) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI ) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்