- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வெற்றிக்கு தவிக்கும் சென்னை! தோல்வியிலிருந்து மீள டெல்லி அணிக்கு எதிராக என்ன செய்யவேண்டும்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறுவதற்கு என்னென்ன செய்யலாம் என்பது பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Author: Bala Murugan K
Published: April 2, 2025
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஐபிஎல் 2025 சீசனில் ஏப்ரல் 5 அன்று சேப்பாக்கத்தில் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே, 3 போட்டிகள் இந்த சீசனில் சென்னை அணி விளையாடிய நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தான் சென்னை வெற்றிபெற்றது. அடுத்ததாக நடந்த 2 போட்டிகளிலும் சென்னை தோல்வி தான் அடைந்தது.
சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் சென்னை அணி டெல்லிக்கு எதிரான தோல்வியில் இருந்து மீண்டு வெற்றியை நோக்கி முன்னேற, சென்னை அணி சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
ஓப்பனிங் சிறப்பு : சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கி பவர்பிளே ஓவர்களில் நிலையான தொடக்கத்தை அளிக்க வேண்டும். டெல்லியின் வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் டி. நடராஜன் ஆகியோரை எதிர்கொள்ள, ஆக்ரோஷமான ஆனால் புத்திசாலித்தனமான அணுகுமுறை தேவை. முதல் 6 ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் 50+ ரன்கள் எடுப்பது முக்கியம். அப்படி பவர்பிளேயில் பக்காவான ஆட்டம் இருந்தது என்றால் நிச்சியம் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
சுழற்பந்து வீச்சை பயன்படுத்துதல்: சேப்பாக்கத்தின் ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ரவீந்திர ஜடேஜா, ஆர். அஷ்வின் மற்றும் நூர் அகமது ஆகியோரின் சுழல் மூலம் டெல்லியின் அதிரடி வீரர்களான ஜேக் ஃப்ரேசர்-மெக்ருக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரை கட்டுப்படுத்த வேண்டும். மிடில் ஓவர்களில் (7-15) ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவது வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
மிடில் ஆர்டரின் பங்களிப்பு: ஷிவம் துபே, சாம் கரன் மற்றும் ராகுல் திரிபாதி போன்ற மிடில் ஆர்டர் வீரர்கள் பெரிய ஷாட்களை ஆடி ரன் ரேட்டை உயர்த்த வேண்டும். டெல்லியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் மற்றும் ஆக்ஸர் படேல் ஆகியோரை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும். தோனியின் அனுபவத்தை டெத் ஓவர்களில் பயன்படுத்தி பெரிய ஸ்கோரை அடைய முயற்சிக்கலாம்.
வேகப்பந்து வீச்சில் துல்லியம்: மதீஷா பதிரனா மற்றும் கலீல் அகமது ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் டெல்லியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோரை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். யார்க்கர்கள் மற்றும் மாறுபட்ட பந்து வேகத்தை பயன்படுத்தி ரன்களை குறைப்பது அவசியம்.
பீல்டிங்கில் சிறப்பு: கடந்த சீசன்களில் சென்னையின் பீல்டிங் சில சமயங்களில் பலவீனமாக இருந்தது. டெல்லியின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த, சிறப்பான கேட்சுகள் மற்றும் ரன்-அவுட் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். ஜடேஜா மற்றும் தோனியின் வழிகாட்டுதலுடன் இளம் வீரர்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்.
ஆடுகளத்தை புரிந்து விளையாடுதல்: சேப்பாக்கத்தில் பெரிய ஸ்கோர்கள் அடிப்பது சவாலானது. முதலில் பேட் செய்தால் 160-170 ரன்களை இலக்காக வைத்து ஆட வேண்டும். பின்னால் பேட் செய்தால், ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பாதுகாத்து, பிறகு துல்லியமாக சேஸ் செய்ய வேண்டும். இந்த விஷயங்களை செய்தாலே நிச்சியம் பழைய சென்னை அணியாக கம்பேக் கொடுத்துவிடும். எனவே, எப்படி விளையாட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.