Advertisement
Women's Day 2025 : "சிங்கப்பெண்ணே.!" மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
வருகின்ற மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது பற்றி விவரம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Author: Bala Murugan K
Published: March 6, 2025
Advertisement
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார, மற்றும் அரசியல் சாதனைகளை கொண்டாடும் ஒரு முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. இது வெறும் விழாவாக மட்டுமல்ல, பெண்களுக்கு எதிராக நிலவும் சமத்துவமின்மையை எதிர்த்து பேசவும், உரிமைகளுக்காக போராடவும் ஒரு வலுவான வாய்ப்பாகவும் அமைகிறது.
மகளிர் தினத்தின் நோக்கம், பெண்கள் சமத்துவம், உரிமைகள், மற்றும் முன்னேற்றத்திற்காக எடுத்துவரப்பட்ட முயற்சிகளை நினைவுகூர்வதோடு, இன்னும் நிலவி வரும் பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளைப் பேசுவதாகும். எந்த ஆண்டில் இருந்து மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது? எப்படி கொண்டாடலாம் என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்…
Advertisement
மகளிர் தினத்தின் வரலாறு
ஆண்டுதோறும் மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டு வருவது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த நாள் கொண்டாட்டப்பட்ட தொடங்கிய காலம் முதல் இன்று வரை ஒரு நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த நாளை உருவாக்க முக்கியமான நிகழ்வுகள் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது. அது பற்றி காணலாம்.
1.ஆரம்ப கால போராட்டங்கள் (1900 - 1920)
- 1908 – அமெரிக்காவில் 15,000 தொழிலாளர் பெண்கள் சிறந்த வேலை நேரம், உயர் சம்பளம், மற்றும் வாக்கு உரிமைக்காக போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய அடுத்த ஆண்டு அதாவது, 1909 – அமெரிக்காவின் சோஷலிஸ்ட் கட்சி முதல் முறையாக மகளிர் தினத்தை "National Women's Day" என்ற பெயரில் கொண்டாடியது.
- அதனைத்தொடர்ந்து, 1910 – ஜெர்மனிய சமூக செயற்பாட்டாளர் கிளாரா செட்கின் என்பவர் மகளிர் தினத்தை சர்வதேச அளவில் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசியிருந்தார். அதன்பிறகு, முதல் சர்வதேச மகளிர் தினம் (International Women's Day - IWD) 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, மற்றும் ஸ்விட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது.
2.ரஷ்யப் பெண்களின் போராட்டம்
- அதன்பிறகு 1917 -ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் "Bread and Peace" (அன்னமும் அமைதியும்) கோஷத்துடன் போராட்டத்தில் இறங்கினர். இது ரஷ்யா மக்களாட்சிப் புரட்சிக்கான தொடக்கமாக அமைந்தது. எனவே, போராட்டத்தை பார்துவிட்டு பெண்கள் எழுச்சி இப்படி இருக்கவேண்டும் என 1977 – ஐக்கிய நாடுகள் (UN) மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
- 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த மகளிர் போராட்டத்திற்குப் பிறகு, மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினமாக மாற்றப்பட்டது. 1977 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் (UN) இதை அதிகாரப்பூர்வமாக சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது.
மகளிர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?
1. பெண்களின் சாதனைகளை கொண்டாட
- அரசியல், தொழில், விளையாட்டு, அறிவியல், சமூக சேவை போன்ற அனைத்து துறைகளிலும் சாதனை படைத்த பெண்களின் வெற்றியை முன்னிறுத்த இது ஒரு முக்கிய நாள். இந்த நாளில் அவர்கள் செய்த சாதனைகளை பற்றி பெருமையாக பேசப்படும்.
2. சமத்துவத்தை வலியுறுத்த
- பல இடங்களில் பெண்கள் இன்னும் சரியான கல்வியும், வேலை வாய்ப்புகளும் பெறுவதில் போராடி வருகிறார்கள். சிலர் படித்துக்கொண்டும் வேலைகிடைக்காமல் வீட்டில் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு வேலைகள் மற்றும் கல்வி கிடைக்க மகளிர் தினம் இதை மாற்ற சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
3. பெண்களின் உரிமைகளை பாதுகாக்க
- தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொல்லை, சம்பவங்கள் என்பது அதிகரித்து கொண்டு இருக்கிறது. எனவேபாலின அடிப்படையிலான வேறுபாடு போன்றவை இன்னும் உலகம் முழுவதும் உள்ளது. இதை எதிர்த்து மகளிர் தினம் ஒரு போராளி மனப்பான்மையை உருவாக்குகிறது.
4. எதிர்கால தலைமுறைக்கு சிறந்த உலகை உருவாக்க
- பெண்களின் உரிமைகளை மதிக்கின்ற சமூகம் உருவாகினால், எதிர்காலத்தில் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் கிடைக்கும். அதனை மையப்படுத்தியும் உலகம் முழுவதும் மகளிர் தினம் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?
பெண்களின் சாதனைகளை பாராட்டுங்கள்
உங்கள் குடும்பத்திலோ, அலுவலகத்திலோ பெண்களின் சாதனைகளை கொண்டாடுங்கள். இதற்கு முன்பு வாழ்ந்து நாட்டுக்காக உயிரிழந்த பெண் தலைவர்கள் பற்றி பெருமையாக பேசி அவர்களை பற்றி தெரியாதவர்களுக்கு கூறுங்கள்.
பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதே சமயம் முக்கியமாக பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த தினம் தான் அவர்களுக்கு மிகவும் சிறந்த தினம் என்பதால் நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் பெண்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் வீட்டில் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களை பற்றி பெருமையாக பேசி ஊக்கம் கொடுங்கள்.
பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்துங்கள். பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து பேசி விழிப்புணர்வுடன் இருக்க வலியுறுத்துங்கள் சமுதாயத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழ ஒரு ஆதரவு அமைப்பை உருவாக்குங்கள்.
மேலும், மகளிர் தினம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டமாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் பெண்கள் சமத்துவத்தை அடைய அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கனல் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
No comments yet.