இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. இது நாட்டின் நிதி அமைப்பை வலுப்படுத்துவதுடன், பல்வேறு சேவைகளின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் செய்கிறது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கிகளை நம்பி நிதி சேவைகளைப் பெறுவதால், வங்கிகள் இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு அவசியமான பாத்திரத்தை வகிக்கின்றன.
இந்நிலையில் 2025-ம் ஆண்டிற்கான முன்னணியில் உள்ள டாப் 10 வங்கிகள், சொத்துமதிப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையின் முதல் 10 இடத்தை பிடித்திருக்கும் வங்கிகளை Jagran பட்டியலிட்டுள்ளது.
முதலிடத்தில் HDFC வங்கி :
வங்கிகளின் சொத்துமதிப்பு, வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில்மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவை முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்துள்ளன.
டாப் 10 வங்கிகளின் பட்டியல் மற்றும் விவரங்கள் :
HDFC வங்கி (HDFC Bank) :
தனியார் வங்கி
மும்பையை தலைமையிடமாக கொண்டு 1994-ல் உருவாக்கப்பட்டது.
சொத்து மதிப்பு - ரூ13.11 லட்சம் கோடி.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை - 10 கோடி.
ICICI வங்கி
தனியார் வங்கி
குஜராத் வடதோராவை தலைமையிடமாக கொண்டு 1994-ல் உருவாக்கப்பட்டது.
சொத்து மதிப்பு - ரூ 9.05 லட்சம் கோடி.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை - 3 கோடி.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI)
பொதுத்துறை வங்கி
1955-ல் உருவாக்கப்பட்டது.
சொத்து மதிப்பு - ரூ.6.95 லட்சம் கோடி..
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை - 50 கோடி.
கோடக் மகிந்திரா வங்கி (Kotak Mahindra Bank)
தனியார் வங்கி
1985-ல் உருவாக்கப்பட்டது.
சொத்து மதிப்பு - ரூ.3.55 லட்சம் கோடி.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை - 5.1 கோடி.
ஆக்சிஸ் வங்கி (Axis Bank)
தனியார் வங்கி
குஜராத் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு 1993-ல் உருவாக்கப்பட்டது.
சொத்து மதிப்பு - ரூ.3.30 லட்சம் கோடி.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை - 2 கோடி.
பாரத வங்கி (Bank of Baroda)
பொதுத்துறை வங்கி
குஜராத் வடதோராவை தலைமையிடமாக கொண்டு 1908-ல் உருவாக்கப்பட்டது.
சொத்து மதிப்பு - ரூ.1.20 லட்சம் கோடி.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை - 12 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank - PNB)
பொதுத்துறை வங்கி
பாகிஸ்தான் லாகூரை தலைமையிடமாக கொண்டு 1895-ல் உருவாக்கப்பட்டது.
சொத்து மதிப்பு - ரூ.1.19 லட்சம் கோடி.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை - 18 கோடி
இந்திய ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)
பொதுத்துறை வங்கி
தமிழ்நாடு சென்னையை தலைமையிடமாக கொண்டு 1937-ல் உருவாக்கப்பட்டது.
சொத்து மதிப்பு - ரூ. 0.97 லட்சம் கோடி
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை - 10 கோடி
கனரா வங்கி (Canara Bank)
பொதுத்துறை வங்கி
கர்நாடகா, மங்களூருவை தலைமையிடமாக கொண்டு 1906-ல் உருவாக்கப்பட்டது.
சொத்து மதிப்பு - ரூ.0.89 லட்சம் கோடி
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை - 11.65 கோடி
யூனியன் வங்கி ஆஃப் இந்தியா (Union Bank of India)
பொதுத்துறை வங்கி
மகாராஷ்டிரா,மும்பையை தலைமையிடமாக கொண்டு 1919-ல் உருவாக்கப்பட்டது.
சொத்து மதிப்பு - ரூ. 0.87 லட்சம் கோடி
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை - 15 கோடி
இந்த தகவல் முழுக்க முழுக்க தனியார் செய்தி நிறுவனமான jagran வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.